ராஜீவ் காந்தி தியாகியா? ஊழல் செய்தவர்தானே? சீமான் விமர்சனத்துக்கு எதிர்ப்பு- உருவ பொம்மை எரித்த காங்.
திண்டுக்கல்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சித்ததாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவபொம்மையை திண்டுக்கல்லில் காங்கிரஸ் நிர்வாகிகள் எரித்ததால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையை தமிழகம் கொண்டாடி மகிழ்கிறது. விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். முன்னதாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் சந்தித்தார். இச்சந்திப்பின் போது பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வரவேற்பும் எதிர்ப்பும்
இதனையடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி, இடதுசாரித் தலைவர்கள் என பலரையும் பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.ஆனால் பேரறிவாளன் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடத்தியது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் இப்போராட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

சீமான் கேள்வி
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒசாமா பின்லேடன் ஒரு சர்வதேச பயங்கரவாதி என்றால் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இந்திய அமைதிப்படை படுகொலை செய்தது. அந்த அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ்காந்தியும் ஒரு சர்வதேச பயங்கரவாதிதான். ஆகையால் காங்கிரஸ் கட்சியின் பேரறிவாளன் விடுதலையை எதிர்க்காமல், திராவிட கட்சிகளுடன் 4 அல்லது 10 சீட்டுக்காக ஒட்டிக் கொண்டு போக வேண்டும் என்றார்.

ராஜீவ் என்ன தியாகியா?
மேலும் ராஜீவ் காந்தி என்ன தியாகியா? போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ரூ400 கோடி ஊழல் செய்தார் என்கிற குற்றச்சாட்டுக்குள்ளானவர்தானே? ஈழத் தமிழர் பிரச்சனையில் தவறு செய்தது ராஜீவ் காந்திதானே.. பேரறிவாளன் விடுதலை தவறு என்றால் ராஜீவ் செய்த தவறு தொடங்கி நாம் பேசுவோம் என்றும் சீமான் கூறியிருந்தார்.

சீமான் உருவ பொம்மை எரிப்பு
சீமானின் இந்த விமர்சனத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீமானின் இப்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திண்டுக்கல் மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சீமானின் உருவ பொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உருவ பொம்மையை பறிக்க முயன்ற போது சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேருந்துகள் வந்து செல்லும் போக்குவரத்து நெரிசலான சாலையில் உருவ பொம்மைய எரித்தபோது காவலர்கள் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த உருவபொம்மை எரிப்பு சம்பவம் காரணமாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications