வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி திண்டுக்கல் சிறையில் உயிரிழப்பு.. நேற்று கைதான நிலையில் இன்று பலி
திண்டுக்கல்: 2012ம் ஆண்டில் நடந்த கடத்தில் வழக்கில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று இரவு திடீரென்று உயிரிழந்துள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். கழுத்தில் பெரிய பெரிய தங்க சங்கிலி, கைகளில் தங்க காப்புகள் அணிந்து உலா வருகிறார். இவர் மீது தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கொலை, மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் வரிச்சியூர் செல்வம் மீது நிலுவையில் உள்ளன.

போலீசார் வரிச்சியூர் செல்வத்தை ரவடி பட்டியலில் வைத்துள்ளனர். அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக நீதிமன்றங்களில் ஆஜராகி வருகிறார். சமீபத்தில் அவரை கோவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த உத்தரவை தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛தற்போது நான் எங்கும் செல்வதில்லை போலீசுக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக எனது பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்கிறேன். எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவது இல்லை'' என்று கூறினார்.
அதேபோல், வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தான் 2021ம் ஆண்டில் நடந்த கடத்தில் வழக்கில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியான வர்க்கீஸ் தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அதன்பிறகு நீதிமன்ற காவலில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இநு்நிலையில் தான் இன்று அவர் உயிரிழந்தார். சிறையில் அவருக்கு திடீரென்று உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உயிர் பிரிந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications