விஜய் ரசிகர்களுக்கு சிவிக் சென்ஸ் எங்கே? கொடைக்கானலில் கூச்சமே இல்லாம.. செஞ்சத பாருங்க!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாவுக்கு வந்த விஜய் ரசிகர்கள் சிலர், குணா குகை அருகே கூட்டமாக நின்றுக்கொண்டு "TVK, TVK" என கத்தியிருப்பது, மொத்த சுற்றுலா பயணிகளையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

சுற்றுலாவுக்கு வருவதே நிம்மதியை தேடிதான். அங்கு வந்தும், ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரை சொல்லி காட்டு கூச்சல் போடுவதெல்லாம் என்ன மனநிலை? சிவிக் சென்ஸ் இல்லையா? என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

Vijay

கடந்த இரண்டு நாட்களாக தவெகவினர் செய்யும் செயல்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக மதுரை அழகர் திருவிழாவில் நேற்று அவர்கள் நடந்துக்கொண்ட விதம் மொத்த பக்தர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. மதம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் அரசியலில் கலந்தது கிடையாது.

நேற்றைய தினம், அழகர் திருவிழாவில் இருந்த ஒரு சில விஜய் ரசிகர்கள் தவெக கொடியை உயர்த்தி பிடித்து "TVK, TVK" என கத்தியிருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ முறை அழகர் திருவிழா நடைபெற்றிருக்கிறது. எந்த கட்சிக்காரர்களும் இப்படி தங்கள் கொடியை கொண்டு வந்து திருவிழாவுக்கு நடுவே உயர்த்தி பிடித்து விளம்பரம் தேடியது கிடையாது. ஏனெனில் தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை அரசியலில் இருந்து மதத்தை 10 அடி தள்ளியே வைத்திருப்பார்கள். இப்பேர்ப்பட்ட மண்ணில், தவெக கொடியை திருவிழாவில் உயர்த்தி பிடித்திருந்த கூட்டத்தை பார்த்து பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.

அதேபோல இன்று கொடைக்கானலில் விஜய் ரசிகர்கள் சிலர், தவெக கொடியை பிடித்துக்கொண்டு "TVK, TVK" என கோஷம் போட்டிருக்கிறார்கள். உண்மையில் கொடி பிடிப்பதும் கோஷம் போடுவதும் நல்ல விஷயம்தான். சிலிண்டர் விலையை ஏற்றினார்களே அதற்கு கொடி பிடித்து கோஷம் போட்டிருந்தால் வரவேற்றிருக்கலாம். ஆனால், எந்த நோக்கமும் இல்லாமல் வெறுமென கூச்சலிடுவதை பார்க்கும்போது விஜய் ரசிகர்களுக்கு சிவிக் சென்ஸ் என்றால் அலர்ஜியோ? என கேட்க தோன்றுவதாக நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

இந்த கூட்டம் போகும் இடமெல்லாம் இப்படி வெற்று கூச்சல் போடுவதால் அந்தந்த பகுதியில் இருக்கும் மக்கள்தான் பாதிப்படைகிறார்கள். மட்டுமல்லாது, சோஷியல் மீடியாக்களில் இந்த வீடியோக்கள் ஷேராகி மொத்த தமிழக மக்களின் மீதான பார்வையையும் மாற்றிவிடுகிறது.

இனி வரும் நாட்களிலாவது, இப்படி போகிற இடங்களில் எல்லாம் சத்தம் போட்டு மக்களின் மன நிம்மதியை கெடுக்க வேண்டாம் என்றும், அப்படி சத்தம் போட தோன்றினால் கட்சி சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று சத்தமிட வேண்டும் என்று விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+