திருச்சி கிழக்கு தொகுதியில் என்ன நடந்தது.. திண்டுக்கல் லியோனி நள்ளிரவில் வீடியோவில் விளக்கம்
திண்டுக்கல்: எதிர்கட்சிகளின் தோல்வி பயத்தால் திருச்சி கிழக்கு தொகுதியில் என் மீது நடத்தப்பட்டது கீழ்தரமான செயல். கண்டிக்கத்தக்கது.இதற்கு பிறகுதான் என்னுடைய பிரச்சாரம் மிக தீவிரமாக இருக்கும் என்று திமுக ஆதரவாளரான திண்டுக்கல் லியோனி வீடியோ வெளியிட்டு கூறியுள்ளார். அவருக்கு திருச்சியில் என்ன நடந்தது என்பதை அவரே வெளியிட்ட வீடியோவில் கூறியிருக்கிறார். அதனை பார்ப்போம்.
திமுக ஆதரவாளரான திண்டுக்கல் லியோனி வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், "எல்லாருக்கும் வணக்கம், கடந்த 16 நாட்களாக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்திற்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.. நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் நான் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது, ஒரு சில பேர் வந்து என் மீது பாட்டிலை வீசினார்கள்.. இது வந்து எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தில் என் மீது நடத்தப்பட்ட இந்த கீழ்தரமான செயல்.. கண்டிக்கத்தக்கது..

ஆனால் இது போன்ற சலசலப்புக்கு எல்லாம் அஞ்சுகிறன் நான் இல்லை.. நான் சார்ந்து உள்ள திராவிட முன்னேற்ற கழகமும் இல்லை. அதனால் என் பிரச்சாரம் இனிமேல் தான் அதிகமாக வீரியத்துடன் என் பிரச்சாரம் இருக்கும்.. அதனால் தோல்வி பயத்தில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகள், இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்கட்சிகளின் தோல்வி பயத்தால்
— Dindigul I. Leoni (@dindigulleoni) April 19, 2026
என் மீது நடத்தப்பட்ட இந்த கீழ்தரமான செயல் கண்டிக்கத்தக்கது.
இதற்கு பிறகுதான் என்னுடைய பிரச்சாரம்
மிக தீவிரமாக இருக்கும் @Kalaignarnews @arivalayam @dmk_youthwing @DMKITwing @mkstalin @sunnewstamil @polimernews @news7tamil @News18TamilNadu pic.twitter.com/xUS1t6MrBe
திண்டுக்கல் லியோனிக்கு என்ன நடந்தது
திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய், திமுக சார்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சாா்பில் க. ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவா் வி. கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் என். கோபிநாத் உள்ளிட்ட 20 பேர் களத்தில் உள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்க்கு ஆதரவாக அந்த தொகுதிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியில் திண்டுக்கல் ஐ. லியோனி நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். வேனில் இருந்து அவர் பேசிக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி காலி மது பாட்டிலை மர்ம நபர் ஒருவர் வீசியிருக்கிறார்.
அந்த பாட்டில் திண்டுக்கல் லியோனி நின்று பேசிக்கொண்டிருந்த பிரச்சார வேனில் விழுந்து உடைந்து சிதறியது. இதில் நல்வாய்ப்பாக திண்டுக்கல் லியோனிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மது பாட்டிலை வீசிய நபர் யார் என்பது குறித்தும் என்ன காரணத்திற்காக வீசினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாகவே இன்று அதிகாலை திண்டுக்கல் லியோனி வீடியோ வெளியிட்டிருந்தார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications