திண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்!

திண்டுக்கல் அருகே பெண் நடுரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நாடு ரோட்டில் பெண் ஓட ஓட வெட்டி கொலை- வீடியோ

    திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் நடுரோட்டில் பெண் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அருகே உள்ளது சொட்டமாயனூர். இங்கு வசித்து வருபவர் கணேசன். இவரது மனைவிதான் மஞ்சுளா. இவருக்கு 43 வயதாகிறது. மஞ்சுளாவுக்கும் கணேசனுக்கும் வேலையே வட்டிக்கு பணம் கொடுத்து அதை வசூல் செய்வதுதான்.

    இந்நிலையில் நேற்று சாயங்காலம் மஞ்சுளா திண்டுக்கல் சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக ஊர் திரும்பி கொண்டிருந்தார். திருக்கண் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து கொண்டிருந்த மஞ்சுளாவை காரில் ஒரு கும்பல் ஃபாலோ செய்து வந்தது. பிறகு திடீரென காரிலிருந்து அரிவாள், கத்தியுடன் இறங்கிய மர்மநபர்கள் மஞ்சுளாவை சுற்றிக் கொண்டனர்.

    வெட்டி கொன்றது

    வெட்டி கொன்றது

    கும்பலைப் பார்த்ததும் நடுங்கி போன மஞ்சுளா தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார். உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினாலும் ஒரு கட்டத்தில் மஞ்சுளாவால் வேகமாக ஓட முடியவில்லை. ஆனால் மர்மகும்பல் மஞ்சுளாவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது. சம்பவ இடத்திலேயே மஞ்சுளா மரணமடைந்தார்.

    கைது செய்ய கோரிக்கை

    கைது செய்ய கோரிக்கை

    விஷயம் பரவி ஊரே ஒன்று கூடியது. மஞ்சுளாவின் சொந்தக்காரர்கள், கொலையாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள திருக்கண் பஸ் ஸ்டாப்பில் மறியலில் உட்கார்ந்து விட்டார்கள்.

    சாலை மறியல்

    சாலை மறியல்

    தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களின் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உறவினர்கள் ஆக்ரோஷமாக இருந்தனர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கோஷம் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுவிட்டது. பிறகு போலீசார் விசாரணையை மோப்ப நாயுடன் துவக்கினர். கொலையாளிகள் யார் என இதுவரை தெரியவில்லை.

    கொடுக்கல் - வாங்கலா?

    கொடுக்கல் - வாங்கலா?

    மஞ்சுளா வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால், கொடுக்கல் - வாங்கல் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா என போலீசார் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+