ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி
அபுதாபி: வளைகுடா போரால் யாருக்கு அதிக பாதிப்பு என்றால், சாமானிய மக்கள் தான். போர் என்றைக்குமே தீர்வுகளை தருவது இல்லை என்பதை அமெரிக்கா உணராத வரையில் இந்த உலகில் சாமானியர்கள் பாதிக்கப்படுவது எழுதப்படாத விதியாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலும், அதனை தொடர்ந்து பதிலுக்கு ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதும் நடந்துள்ளது. இதன் காரணமாக மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 200 எண்ணெய் கப்பல்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல் பணியாளர்கள் சிக்கி தவித்து வருகின்றன. கேட்கவே மலைப்பாக இருக்கிறது.. ஆனால் அதுதான் கசப்பான நிஜம்.
வளைகுடாவில் உள்ள எண்ணெய் வயல்களை கட்டுப்படுத்தி டாலரில் தான் எண்ணெய் வர்த்தகம் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா ஏக போக உரிமை வைத்துள்ளது. இதில் ஈரான் மட்டும் அமெரிக்காவின் சொல்படி நடக்கவில்லை. ஈரான் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள நாடு. இதனிடையே பாலஸ்தீனம், ஏமன், பல்வேறு நாடுகளில் நடைபெறும் கிளர்ச்சி போராட்டங்களுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் நம்பி வந்தன.

20 ஆயிரம் பணியாளர்கள் நிலை
இதனால் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தன. அடுத்ததாக போர் தொடுத்தன. இந்த போர் உலக பொருளாதாரத்தையே முடக்கும் வல்லமை கொண்ட போர் என்று அமெரிக்கா கனவிலும் நினைத்திருக்காது. ஏனெனில் உலகின் முக்கிய கடல்சார் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவித்தது. இதனை அடுத்து அங்கு சென்ற கப்பல்கள் தாக்கப்பட்டு மொத்த வர்த்தக போக்குவரத்தும் தடைபட்டிருக்கிறது. இதில் அந்த பகுதியில் நின்று கொண்டு இருக்கும் சரக்கு கப்பல்களில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தற்போது திக்கு திசை தெரியாமல் அவதிப்படுகிறார்கள்.
3200 எண்ணெய் கப்பல்கள்
சுமார் 3 ஆயிரத்து 200 எண்ணெய் கப்பல்கள் முன்னேறி செல்ல முடியாமல் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் உள்ள பணியாளர்கள் குளிர்சாதன வசதிகள் மூலம் உணவு பொருட்களை பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் அத்தியாவசியமான குடிநீர் போன்றவைகளை புதுப்பிப்பதில் கடினமான நிலை நிலவுகிறது.. வேலையை இழக்கும் அபாயத்தில் பயத்தில் கப்பலில் பணியாளர்களும் தங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க யாரும் முன்வரவில்லை..
நாடு எப்போது திரும்புவோம்
சர்வதேச கப்பல் பணியாளர்கள் நல தொடரமைப்பின் சர்வதேச மேலாளர் சிராக் பஹ்ரி கூறுறுகையில், "உதவிகோரும் விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பங்கு தங்கள் நாட்டிற்கு திரும்ப அனுமதி கேட்டுள்ளனர். போனஸ், இழப்பீடு எதையும் பொருட்படுத்தாமல் உயிர் பாதுகாப்பே முக்கியம் என கப்பல் பணியாளர்கள் கருதுகின்றனர். உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை தேவைகளை பெறுவது பெரும் சவாலாக கப்பல் பணியாளர்களுக்கு இருக்கிறது. நடப்பு மாதம் 13-ந் தேதி முதல் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதில் உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டு வருகின்றது. இதனால் கப்பலை நகர்த்தக்கூட அச்சத்தில் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
கலங்கியபடி பேசும் கப்பல் கேப்டன்
கடலில் இருந்து கரையை காண முடிந்தாலும் அங்கு சென்று சேர முடியாத நிலையில் உள்ளதாக மனவேதனையுடன் அந்த பணியாளர்கள் தவித்து வருகிறார்கள்.. ஏற்கனவே அமீரகத்தின் கடற்கரை அருகே ஏற்பட்ட பிரச்சினையில் 2 ஆண்டுகள் கடலில் சிக்கி இருந்த கப்பல் கேப்டன் தற்போது மீண்டும் அதே சூழ்நிலையில் சிக்கியிருக்கிறது பாதுகாப்பு காரணங்களுக்காக தனது அடையாளத்தை வெளியிட மறுத்துள்ள அந்த கேப்டன், ஏவுகணை தாக்குதல்கள் தினமும் நடக்கின்றன, அனைத்து கப்பல் பணியாளர்களும் பயத்தில், உதவியற்ற நிலையில் உள்ளனர் என தெரிவித்தார். நிலப்பரப்பிலும், நீர் நிலையிலும் தொடரும் இந்த போராட்டம் என்று முடிவடையும் என 20 ஆயிரம் கப்பல் பணியாளர்கள் வலிகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போரால் தீர்வு இல்லை
இது வெறும் 20 ஆயிரம் பேரின் வலி மட்டுமல்ல.. ஒட்டுமொத்த உலக நாடுகளின் வலி.. இதனை உணர வேண்டிய அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் உணர்ந்து போரை கைவிட்டு விட்டு உட்கார்ந்து பேசினால் தான் பிரச்சனை தீரும்.. போர் என்றைக்குமேதீர்வு இல்லை.. ஏனெனில் அமெரிக்கா போரை தொடங்கிய ஈரான், கியூபா, ஆப்கானிஸ்தான் என எந்த நாட்டிலும் நிலை சரியாகவில்லை.. அதேபோல் போர் நடக்கும் எந்த நாட்டிலும் நிலைமை சரியாக இல்லை என்பதே எதார்த்தம்.












Click it and Unblock the Notifications