துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்போ பேசுங்க.. சீறிய வார்னர் மனைவி.. பதிலடி தந்த ஆரோன் பின்ச்.. யாரை சொல்கிறார்கள்?

Google Oneindia Tamil News

துபாய்: 2021 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார். இந்த தொடரில் 7 இன்னிங்சில் 289 ரன்களை இவர் எடுத்தார்.

Recommended Video

    David Warner பற்றி Coach-கிட்ட பேசிய Aaron Finch நெகிழ்ச்சி சம்பவம் | Oneindia Tamil

    146.70 ரன்கள் ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக ஆடி இந்த ரன்களை வார்னர் குவித்து உள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமை விட குறைவான ரன்கள் எடுத்து இருந்தாலும் இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் 3 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - இன்று பள்ளிகளுக்கு எங்கெங்கு விடுமுறை கன்னியாகுமரியில் 3 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - இன்று பள்ளிகளுக்கு எங்கெங்கு விடுமுறை

    2021 ஐபிஎல் சமயத்தில் புறக்கணிக்கப்பட்ட இவர் தற்போது புறக்கணிப்புகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

    ஆரோன்

    ஆரோன்

    இந்த நிலையில் டேவிட் வார்னர் குறித்து கேப்டன் ஆரோன் பின்சும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், வார்னர் பார்ம் குறித்து ஆஸ்திரேலிய அணிக்கு சிறிய கவலை இருந்தது. அவர் ஐபிஎல்லில் சரியாக ஆடவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அணியின் தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் குழு வார்னரை அணியில் எடுப்பது குறித்த குழப்பத்தில் இருந்தது. ஆனால் நான் அவருக்கு முழு ஆதரவு வழங்கினேன்.

     ஆட்டம்

    ஆட்டம்

    அவர் கண்டிப்பாக நன்றாக ஆடுவார் என்று குறிப்பிட்டேன். அதேபோல் வார்னர் இந்த தொடரில் சிறப்பாக ஆடி தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார். வார்னரை எப்போதும் குறைத்து மதிப்பிட கூடாது. அவர் சரியாக ஆட மாட்டார் என்று மட்டும் நினைவிட கூடாது. அவர் சிறந்த வீரர். அவரின் ஆட்டத்தை பார்க்க சந்தோசமாக இருந்தது, என்று வார்னர் குறித்து ஆரோன் பின்ச் குறிப்பிட்டுள்ளார்.

    சீண்டினார்

    சீண்டினார்

    இந்த நிலையில் டேவிட் வார்னரின் மனைவி கேன்டி வார்னர் தனது கணவரின் ஆட்டம் குறித்து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில், ரொம்ப ஸ்லோ.. வயசாகிடுச்சு.. பார்மில் இல்லை என்று குறிப்பிட்டு ஸ்மைலிகளை வெளியிட்டுள்ளார். வார்னருக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களை கேண்டி குறிப்பிட்டு மறைமுகமாக சிலரை சீண்டி உள்ளார். வார்னர் பேட்டிங் பற்றி இப்போ முடிஞ்சா விமர்சனம் பண்ணுங்க என்பது போல கேண்டி போஸ்ட் செய்துள்ளார்.

    இரண்டு பேர்

    இரண்டு பேர்

    இரண்டு பேருமே மறைமுகமாக சன் ரைசர்ஸ் அணியை விமர்சிப்பது போல பேசி உள்ளனர். ஹைதராபாத் அணிதான் வார்னரை ஓரம் கட்டியது. வார்னருக்கு வாய்ப்பு கொடுக்காமல் உட்கார வைத்தது. ஐபிஎல் நேரத்தில் இவரின் கேப்டன்சி முதலில் பறிக்கப்பட்டது. பின்னர் இவரை 18 பேர் கொண்ட குழுவில் கூட சேர்க்கவில்லை. இதனால் வார்னர் ஹைதராபாத் அணி ஆடும் போது மைதானத்திற்கு கூட வரவில்லை.

    சன் ரைசர்ஸ்

    சன் ரைசர்ஸ்

    இவரை ஹைதராபாத் அணியின் வாகனத்தில் ஏற கூடாது என்றும் கூறி அணி நிர்வாகம் அவமானப்படுத்தி உள்ளது. இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். நீங்கள் வர கூடாது என்று கூறி வார்னரை ஹோட்டலிலேயே அணி நிர்வாகம் உட்கார வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஹைதராபாத் அணி நெய்வகத்தை விமர்சிக்கும் வகையில் வார்னரின் மனைவி மற்றும் ஆரோன் பின்ச் அகியோர் பேசி உள்ளனர்.

    English summary
    Aaron Finch, Warner wife comment on David Warner performance in T20 World Cup series for Australia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X