டீமா இது.. சிஎஸ்கேவா இது.. மீம்ஸ் போட்டு செமையா கலாய்க்கும் நெட்டிசன்
துபாய்: துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது.
முதலில் பேட் செய்து டெல்லி 175 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது பேட் செய்த சென்னை 7 விக்கெட்டுகளைத்தான் இழந்திருந்தபோதிலும், 20 ஓவர்களில் 131 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது.
துவக்க மற்றும் நடுகள ஆட்டக்காரர்களில் டுப்ளசி தவிர அனைவரும் டெஸ்ட் மேட்ச் ஆடிக் கொண்டு இருந்ததுதான் இப்படி ஒரு பரிதாப தோல்விக்கு காரணம்.

தோல்வி பழகிவிட்டதா
இரு முறை ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே இப்படி நடக்க முடியாமல் தவழும் நிலைக்கு போனதை தாங்க முடியாத ரசிகர்கள், புண்பட்ட மனதை மீம்ஸ் போட்டு ஆற்றி வருகிறார்கள். இத்தனைக்கும், சிஎஸ்கே அணிக்கு இது முதல் தோல்வியும் கிடையாது. அடுத்தடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளுக்கு எதிரான போட்டிகளில், சிஎஸ்கே தோற்றுள்ளது. இப்படியே போனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மாதிரி, சென்னை அணியும் வெறும் பொழுது போக்கு டீமாக மாறிவிடும் என்பதுதான் ரசிகர்கள் கொந்தளிப்புக்கு காரணம்.

செட் ஆகும் முன்பு அவுட்
தோனி நேற்றைய போட்டியில் கேதர் ஜாதவை இறக்கிவிட்டுவிட்டு அவருக்கு பிறகு இறங்கினார். ஆனால் அவர் செட் ஆகும் முன்பாக தேவைப்படும் ரன் ரேட் இமயத்திற்கு போய்விட்டது. பிறகு தோனி அவுட்டாகி வெளியே வந்ததுதான் மிச்சம். இதைத்தான் சுறா படத்தில், வடிவேலு போட்டிக்கு கிளம்பி வருவதற்குள் படகு போட்டி முடிந்துவிடும் காட்சியோடு ஒப்பிட்டு ஓட்டுகிறார்கள் ரசிகர்கள்.

ரன் ரேட்டை சொன்னா போதும்
முன்பெல்லாம், சிஎஸ்கே வெற்றிக்காக ஆடும். ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ரன் ரேட்டை சிஎஸ்கே பாதுகாக்க ஆடியது என்று தோனி ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். எனவேதான் நேற்றைய போட்டியிலும், சிஎஸ்கே வெற்றி பெற்றதா என்பதை விட ரன் ரேட் மட்டும் போதும் என்று முன்கூட்டியே மீம் போட்டுள்ளார் இந்த நெட்டிசன். ஆக.. நம்மாட்கள் வெற்றி பெறாவிட்டால் இப்படியே ரன் ரேட்டை சொல்லி சமாளிக்க முடிவெடுத்துட்டாங்க போல.

டீமா இது
கடைசி இரண்டு மேட்ச் சிஎஸ்கே போட்டியை பார்த்தவர்களுக்கு தோணுவதுதான் இது. டீமா இது.. அதுவும் சிஎஸ்கேவா இது என்பதுதான் அந்த கேள்வி. ஏனெனில் ஆஸ்திரேலியா அணிபோல, கடைசிவரை போராடும் குணம்தான் சென்னையின் தனித்துவம். ஆனால் இப்போது அது மிஸ்சிங்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications