Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவுதம் கம்பீருக்கு எவ்வளவு வன்மம்.. ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கே பெற்ற வெற்றி பற்றி சர்ச்சை கருத்து

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐபிஎல் பைனல் போட்டியில் சிஎஸ்கே பெற்ற வெற்றியும், அதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வெளியிட்ட ட்விட்டர் பதிவும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    CSK வெற்றிக்கு வாழ்த்திய Gambhir.. ஆனா அதிலும் கூட வன்மம்.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்

    கவுதம் கம்பீருக்கு, தோனியை கண்டாலே ஆகாது. ஒருமுறை தோனி பேட் செய்தபோது, அருகாமையில் பல ஃபீல்டர்களை நிறுத்தி தோனியை கேலி செய்வது போல செயல்பட்டார் கவுதம் கம்பீர்.

    அதேநேரம், கொல்கத்தாவுக்காக முன்பு விளையாடியவர் என்பதால் கவுதம் கம்பீர் எப்போதும் அந்த அணியை தூக்கி நிறுத்தி பேசி வருகிறார். நேற்று ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா மோதின. வழக்கம்போல வாய் விட்டார் கவுதம் கம்பீர்.

    மாறி நடக்கும்

    மாறி நடக்கும்

    கொல்கத்தாதான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கவுதம் கம்பீர் தெரிவித்தார். ஆனால் இதை பார்த்ததும், கொல்கத்தா ரசிகர்களை விட சிஎஸ்கே ரசிகர்கள் அதிகம் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில், கவுதம் கம்பீர் எதை சொன்னாலும் அப்படியே மாற்றிதான் நடக்கும் என்ற அசராத நம்பிக்கை சிஎஸ்கே ரசிகர்களுக்கு உள்ளது. பழைய பல வரலாறுகள் அப்படித்தான் இருக்கின்றன.

    சிஎஸ்கே சாம்பியன்

    சிஎஸ்கே சாம்பியன்

    கவுதம் கம்பீர் ராசியை சிஎஸ்கே ரசிகர்கள் வெகுவாக நம்பியிருந்த நிலையில், அப்படியே நடந்தது. 4வது முறையாக ஐபிஎல் சாம்பியனானது சென்னை அணி. அத்தோடு விடுவாரா என்றால், இல்லை. அதன்பிறகு கவுதம் கம்பீர் போட்ட ட்வீட் வேற லெவல். மீண்டும் சிஎஸ்கேவை வம்பிழுக்கும் வகையில் இருந்தது அந்த ட்வீட்.

    பைனல் போகும்போது கப்

    பைனல் போகும்போது கப்

    கவுதம் கம்பீர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வாழ்த்துக்கள் சென்னை என்று ஒரு வார்த்தையோடு முடித்துக் கொண்டார். மேலும் அவர், கவலைப்படாதீர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். நாம் 3 ஃபைனலுக்கு போய் 2 முறை கோப்பையை அடித்த அணிதான். எனவே தலை நிமிர்ந்து நில்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சீண்டிய கம்பீர்

    சீண்டிய கம்பீர்

    சென்னை அணி 9வது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது. 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆனால் கேகேஆர் இதற்கு முன்பு இருமுறை பைனலுக்குள் நுழைந்தது. 2 முறையும் கோப்பையை வென்றது. எனவே வெற்றி சதவீதம் 100 என்ற அளவில் இருந்தது. எனவே கேகேஆர்தான் சூப்பர் அணி என அதன் ரசிகர்கள் கூறி வந்தனர். கம்பீரும் நாம் பைனலுக்குள் வந்த அதிக முறை கோப்பையை வென்றுள்ளோம் என்று சென்னையை சீண்டியுள்ளார். இதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. நான் 8ம் வகுப்பு பாஸ்ணே.. நீங்க 10ம் வகுப்பு ஃபெயிலுன்னு சொல்வதை போல இருக்கிறது கவுதம் கம்பீர் ட்வீட் என்று கிண்டல் செய்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.

    சிஎஸ்கே வெற்றி

    சிஎஸ்கே வெற்றி

    நீங்கதான் சிஎஸ்கே கோப்பையை வெல்ல காரணம். எப்போதெல்லாம் சிஎஸ்கேவுக்கு எதிர் தரப்புக்கு நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்களோ அப்போதெல்லாம் சிஎஸ்கே வெற்றி பெறுகிறது. அடுத்த வருடமும் நீங்கள் இதே நோக்கத்தோடு வர வேண்டும். இவ்வாறு ஒரு நெட்டிசன் கிண்டல் செய்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+