தினேஷ் கார்த்திக் மிகப்பெரிய குற்றவாளி.. விட்டு விளாசிய வீரேந்திர சேவாக்.. என்னாச்சு?
துபாய்: அஸ்வின் அல்ல, தினேஷ் கார்த்திக்தான் பெரிய குற்றவாளி என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, கொல்கத்தா கேப்டன் மோர்கன் மற்றும் அஸ்வின் இடையே மைதானத்தில் வைத்து ஆவேச வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் வழக்கமான சண்டை என்று நினைத்து விட்டு விட்டனர். கூடவே டிம் சவுத்தியும் அஸ்வினுடன் வம்பு செய்திருந்தார்.

தினேஷ் கார்த்திக் விளக்கம்
இந்த சம்பவம் நடைபெற்றபோது, தினேஷ் கார்த்திக்தான் வந்து அஸ்வினுடன் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். ஆனால் போட்டிக்கு பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் கார்த்திக், அந்த சண்டை ஏன் என்று விளக்கம் அளித்தார்.

என்ன காரணம்
அஸ்வின் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் பேட்டிங் செய்தபோது, சிங்கிள் ஓடினர். அப்போது, திரிபாதி பந்தை த்ரோ செய்தார். அந்த பந்து பந்த் கையில் பட்டு வேறு பக்கம் போனது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அஸ்வின்.. வா.. வா.. என்று பந்த்தை அழைத்து 2வது ரன் ஓடச் செய்தார். அஸ்வின் அவுட்டாகி வெளியே போனது டிம் சவுத்தி மற்றும் மோர்ன் இந்த சம்பவத்தை குத்திக் காட்டி பேசியதால் அஸ்வின் வாக்குவாதம் செய்ததாக தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

தர்மம் இல்லையே
இவ்வாறு, பேட்ஸ்மேன் மீது பந்து பட்டு அதற்கு கூடுதலாக ரன் ஓடுவது தார்மீகம் இல்லை. அதை அஸ்வின் செய்து விட்டார் என்று விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. இந்த நிலையில் வீரேந்திர சேவாக் ஒரு கிரிக்கெட் வெப்சைட்டுக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

குற்றவாளி தினேஷ் கார்த்திக்
அவர் கூறுகையில், தினேஷ் கார்திக்தான் இந்த சம்பவத்தில் பெரிய குற்றவாளி. மோர்கன் என்ன பேசினார், ஏன் சண்டை என்று தினேஷ் கார்த்திக் பேசாமல் இருந்திருக்க வேண்டும். அப்படி சொல்லாமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு விமர்சனங்கள் கிளம்பியிருக்காது. வெறும் மோதல்தான், ஆட்டத்தில் அப்படியெல்லாம் நடக்கும், பரவாயில்லை என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தால், அது புத்திசாலித்தனமான பேச்சாக இருந்திருக்கும். அதை விடுத்து ஏன் விரிவாக விளக்கமாக சொல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார் சேவாக்.

டெல்லி பாசம்
வீரேந்திர சேவாக் டெல்லியைச் சேர்ந்தவர். டெல்லி அணிக்காக ஆரம்ப காலங்களில் ஐபிஎல் தொடரில் ஆடியவர். அந்த பாசத்தில் டெல்லிக்காக விளையாடும் அஸ்வினுக்கு ஆதரவாக பேசுகிறார் என்று சில நெட்டிசன்கள் விமர்சனத்தை ஆரம்பித்து விட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications