துபாயில் கோடீஸ்வரரின் மனைவிக்கு பிறந்தநாள்! ரூ 60 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை கொடுத்த கணவர்
துபாய்: துபாயில் தனது மனைவி பிறந்தநாளுக்கு கணவர் ரூ 60 லட்சம் செலவு செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களின் கொண்டாட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர் பணத்தை இப்படி வீணடிக்கிறார்களே என பதிவிட்டுள்ளனர்.
துபாயைச் சேர்ந்தவர் கோடீஸ்வரர் ஜமால். இவரது மனைவி சவுதி அல் நடக். இவருக்கு 26 வயதாகிறது. இவரது பிறந்தநாளுக்குத்தான் கணவர் ஜமால் ரூ 60 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை கொடுத்து அசத்தியுள்ளார். இது குறித்து சவுதி அல் நடக் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவையும் போட்டுள்ளார்.

அதில் தனது கணவரிடம் இருந்து தான் பெற்ற பரிசுகளை பட்டியலிட்டுள்ளார். தனது பிறந்தநாளன்று மியூ மியூவில் ஷாப்பிங் செய்ய ரூ 12 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. அது போல் கணவருடன் சேர்ந்து ரூ 1 லட்சம் செலவழித்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் விருந்து சாப்பிட்டேன்.
ஹெர்ம்ஸ் பிராண்ட் ஷோரூமுக்கு தன்னை அழைத்து சென்ற கணவர் ரூ 29 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்தார். இது தவிர அழகு சிகிச்சைகளுக்காக நிறைய பணம் செலவழித்தார். மொத்தத்தில் எனது பிறந்தநாளுக்கு மட்டும் ரூ 60.74 லட்சம் செலவானதாக அந்த பெண் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் 34 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 51 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இப்படியா பணத்தை வீணடிப்பது. இல்லாதவர்களுக்கு கொடுத்து புண்ணியத்தை சேர்த்திருக்கலாமே என்கிறார்கள். இன்னும் சில நெட்டிசன்கள், அது அவர்களுடைய பணம், எப்படி வேண்டுமானாலும் செலவு செய்ய அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இதில் கருத்து சொல்ல நாம் யார் என்கிறார்கள்.
அந்த வீடியோவில் மனைவிகள் தங்களுக்கு தேவையானதை எப்படியாவது வாங்கிக் கொள்வார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகின்றன. அல் நடாக் துபாய்க்கு அவர்களது 6 வயது முதலே வந்துவிட்டனர். இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தனர்.
இவர்கள் திருமணத்திற்காக இவர்களுக்குள்ளேயே போடப்பட்ட விதிகள் என்ன தெரியுமா. இருவருக்குமே எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களுடன் நட்பு இருக்க கூடாது. அதாவது ஜமாலுக்கு பெண் தோழிகளும், நடக்கிற்கு ஆண் நண்பர்களும் இருக்கவே கூடாது. இருவரது கடவுச்சொற்களை ஒருவரை ஒருவர் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். எப்போதும் இருவரும் ஒரே இடத்தில் இருத்தல் போன்ற கண்டிஷன்களை போட்டுத்தான் திருமணம் செய்து கொண்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications