இங்கிலாந்து vs நியூசிலாந்து.. அரையிறுதியில் யாருக்கு வெற்றி? அசர வைக்கும் புள்ளி விவரத்தை பாருங்க
துபாய்: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறும்.
Recommended Video
சூப்பர் 12 சுற்றின் போது இங்கிலாந்து குரூப் 1 இல் இடம்பெற்றிருந்தது. இயான் மோர்கன் தலைமையிலான அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி, 4ல் வெற்றி, 1ல் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. பின்னர் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பின்னர் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்திலும், இலங்கையை 26 ரன்கள் வித்தியாசத்திலும் அசால்டாக வீழ்த்தியது.

இங்கிலாந்து வெற்றிகள்
அதேநேரம், இங்கிலாந்து அணி தனது இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 8 புள்ளிகளுடன், குழு 1ல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது இங்கிலாந்து. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா சமமான வெற்றி புள்ளிகளை எடுத்திருந்தாலும், இங்கிலாந்துதான் இந்த 3 அணிகளில் சிறந்த நிகர ரன் விகிதத்தைக் கொண்டிருந்தது. எனவே டாப் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

தென் ஆப்பிரிக்கா வெளியேறியது
நெட் ரன் ரேட்டில் ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்ததால், அதுவும் அரையிறுதிக்கு போனது. 4 போட்டிகளில் வென்றபோதிலும், ஆஸி.யைவிட ரன் ரேட் குறைவு எனப்தால், 3வது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா வெளியேறியது.

நியூசிலாந்து வெற்றிகள்
நியூசிலாந்தைப் பொறுத்தளவில், குழு 2ல் இருந்தது. சூப்பர் 12 சுற்றின் போது 5 போட்டிகளில் விளையாடி 4 ஆட்டங்களில் வெற்றி, 1 தோல்வியடைந்தது. நியூசிலாந்து தனது 2வது ஆட்டத்தில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தானிடம் தோற்ற நியூசிலாந்து
நியூசிலாந்து, ஸ்காட்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 52 ரன்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. 8 புள்ளிகளுடன், குழு 2 புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு கீழே 2வது இடத்தைப் பிடித்தது.

யார் பெரிய டீம்
ENG vs NZ ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட்: இதுவரை இங்கிலாந்து-நியூசிலாந்து மோதிய போட்டிகளில் 13 போட்டிகளில் இங்கிலாந்தும், 7 போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. அபுதாபி கிரவுண்டில் இதற்கு முன்பு இரு அணிகளும் மோதியது இல்லை. கடந்த 5 டி20 போட்டிகளை மட்டும் எடுத்து பார்த்தால், நியூசிலாந்து 3ல் வென்றுள்ளது. இங்கிலாந்து 2ல் வென்றுள்ளது. ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை தொடர்களில், 5 போட்டிகளில் இரு அணிகளும் சந்தித்துள்ளன. அதில் 3 முறை இங்கிலாந்தும், 2 முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

இங்கிலாந்து டாப் வீரர்கள்
இங்கிலாந்து வீரர்களில் ஜோஸ் பட்லர் 5 ஆட்டங்களில் 240 ரன்கள் குவித்து அசைக்க முடியாத ஃபார்மில் உள்ளார். ஜேசன் ராய் 5 ஆட்டங்களில் 123 ரன்கள் எடுத்துள்ளார். டாவிட் மலான் 75 ரன்கள் எடுத்துள்ளார். ஆடில் ரஷீத் 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொயீன் அலி 5 போட்டிகளில், 7 விக்கெட்டுகளையும், டைமல் மில்ஸ் 5 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

நியூசிலாந்து டாப் வீரர்கள்
நியூசிலாந்தின் டாப் பேட்ஸ்மேனாக இப்போது இருப்பவர் மார்டின் கப்தில். 5 போட்டிகளில் 176 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் கனே வில்லியம்சன் 5 போட்டிகளில் 126 ரன்கள் எடுத்துல்ளார். மிட்சல் 125 ரன்கள் எடுத்துள்ளார். டிரெண்ட் பவுல்ட் 5 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இஷ் சோடி 8 விக்கெட்டுகள், டிம் சவுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications