துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“அதிசயம்” நடக்கலாம்! ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு “கடைசி சான்ஸ்”! எல்லாம் ஆப்கானிஸ்தான் கையில்

Google Oneindia Tamil News

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், இலங்கை என அடுத்தடுத்து தோல்வியை தழுவி இருக்கும் இந்திய அணி, தொடரிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தது இந்தியா.

2 வது லீக் போட்டியில் குட்டி அணியான ஹாங்காங்கிற்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணி வெற்றியை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

கொடுமை.. இந்திய அணியை துரத்திய கொடுமை.. இந்திய அணியை துரத்திய "அந்த" தப்பு.. இலங்கையிடம் வீழ்ந்தது எப்படி? 5 "மெகா" காரணங்கள்!

பாகிஸ்தானிடம் தோல்வி

பாகிஸ்தானிடம் தோல்வி

சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்று இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொண்டது இந்திய அணி. அதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது இந்தியா.

 இலங்கையிடம் தோல்வி

இலங்கையிடம் தோல்வி

இந்த நிலையில் நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடியது. டாஸ் வென்று பந்துவீச்சை இலங்கை அணி தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி, இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இந்திய அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். எனவே அடுத்து நடைபெற உள்ள 3 போட்டிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளை தீர்மாணிக்கும்.

ஆப்கானிஸ்தான் கையில்

ஆப்கானிஸ்தான் கையில்

குறிப்பாக இந்திய அணி ஆப்கானிஸ்தானையும் இலங்கையையும் நம்பி இருக்கிறது. இன்று நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அடுத்து நடக்க இருக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் இந்திய அணியில் தொடரிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இரண்டிலும் பாகிஸ்தான் தோற்றால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறும். அடுத்து நடக்கவிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டும். அதுவும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் சிக்கல் இன்றி உள்ளே செல்லலாம். ஆனால், இதற்கான முடிவு இன்று நடைபெறும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியில் தெரிந்துவிடும்.

English summary
India had a last chance to enter in Asia cup finale: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், இலங்கை என அடுத்தடுத்து தோல்வியை தழுவி இருக்கும் இந்திய அணி, தொடரிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X