மனசை உறுத்தும் 5 கேள்விகள்.. பதில் சொல்வாரா விராட் கோலி? இந்திய அணி தோல்விகளுக்கு இதுதானே காரணம்!
துபாய்: 2021 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் தொடர்ச்சியான இரண்டாவது தோல்வி, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு மீது 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தானுக்குப் பிறகு நியூசிலாந்தும் இந்திய அணியை மிக எளிதாக வென்றதால் ரசிகர்கள் அதிர்ச்சியிலுள்ளனர்.
டீம் இந்தியாவின் தோல்விகளை விடவும் அதன் செயல்பாடு படு மோசமாக உள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் எதிரணியின் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது. பேட்ஸ்மேன்களின் நிலையும் பரிதாபமாகவே இருந்தது.

கலாய்க்கும் அக்தர்
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களை சேகரிக்க போராடி வருகின்றனர். விராட் கோலியின் இந்த அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூட பங்கமாக கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். சோயிப் அக்தர், கூறுகையில் இந்தியாவிடம் 'கேம் ப்ளான் இல்லை, நியூசிலாந்து மட்டுமே போட்டியை விளையாட வந்ததாகத் தெரிகிறது என்று தெரிவித்தார். அதாவது இந்தியா வேடிக்கை பார்க்க வந்தது என்ற அர்த்தத்தில் கூறினார் அவர்.

கேள்விகள்
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரைப் பற்றி கேள்வி எஞ்சி நிற்கிறது. உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிக்கு உடல் தகுதியற்ற ஹர்திக் பாண்டியாவை இந்திய தேர்வாளர்கள் ஏன் தேர்வு செய்தனர்? டி20 உலகக் கோப்பையின் முதல் நாளிலேயே ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டது அணியின் சமநிலையை சீர்குலைத்தபோதும் ஏன் நியூசிலாந்துக்கு எதிராக அவரை மீண்டும் அணியில் சேர்த்து விளையாடினர். மற்ற ஆல்ரவுண்டர்களை விட ஹர்திக்கிற்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

ஹர்திக் பாண்ட்யாவிற்கு முன்னுரிமை
ஹர்திக் பாண்டியாவை 11 பேர் கொண்ட டீமில் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் பல சமரசங்கள் செய்தும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்தியத் தேர்வாளர்களால் ஏன் உடல் தகுதியற்ற வீரரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக ஒரு தகுதியான ஆல்ரவுண்டரை அடையாளம் காண முடியவில்லை.

வருண் சக்ரவர்த்தி உடல்தகுதி எப்படி?
சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி உடல்தகுதியுடன் இருந்தாரா என்பது குறித்து இந்திய தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டியுள்ளது. மிஸ்ட்ரி (மர்ம) பந்துவீச்சாளர் என்று அழைக்கப்படும் வருண் முதல் இரண்டு போட்டிகளிலும் சோர்வாக காணப்பட்டார். வருணுக்கு நீண்ட நாட்களாக உடற்தகுதி பிரச்சனை இருந்தது. ஐபிஎல் 2021ல் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 இன் போது காயம் அடைந்ததால் அவர் முழு உடல் தகுதியுடன் இல்லை. இருந்த போதிலும், அவருக்கு அணியில் இடம் கிடைத்தது, இந்த பந்து வீச்சாளர் 'துருப்பு சீட்டு' என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் வருணால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.

புவனேஷ்வரின் உடற்தகுதி குறித்தும் சந்தேகம் உள்ளது
முழு உடற்தகுதியுடன் இல்லாத மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஏன் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 முதல் பாதியில் புவி ஃபார்முடன் இருந்தார். புவனேஸ்வர் குமார் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களைப் போலவே பாகிஸ்தானுக்கு எதிராக சோபிக்காமல் இருந்தார். டெத் ஓவர்களில் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் புவனேஷ்வர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2021 இன் இரண்டாவது பாதியில் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை, மேலும் வெறும் 3 விக்கெட்டுகளுடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக புவனேஸ்வர் குமாருக்கு ஆட வாய்ப்பு தரப்பட்டது.

சஹல் ஏன் புறக்கணிக்கப்பட்டார்?
டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து மூத்த லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஏன் நீக்கப்பட்டார்? ஐபிஎல் 2021ல் சாஹல் மொத்தம் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹல் முதலிடத்தில் இருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார். இருந்த போதிலும், சாஹலுக்குப் பதிலாக இளம் வயது ராகுல் சாஹருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் விளையாடிய சாஹர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறப்பாக செயல்படவில்லை.

தவான் ஏன் இல்லை?
ஐபிஎல் 2021ல் 500 ரன்களுக்கு மேல் அடித்த தொடக்க வீரர் ஷிகர் தவான், டி20 உலகக் கோப்பைக்காக புறக்கணிக்கப்பட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 14வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சரியாக பேட் செய்ய முடியாமல் திணறினார். அவருக்கே தன்னம்பிக்கை இல்லாமல்தான் நியூசிலாந்துக்கு எதிரான ஒன்டவுன் இறங்கினார் ரோகித் சர்மா. இஷான் கிஷான் ஓப்பனிங் செய்தார். இதோ இதுதான், இந்தியாவின் T20 உலகக் கோப்பை 2021 அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், வருண் சக்ரவர்த்தி , ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி. காத்திருப்பு வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் மற்றும் தீபக் சாஹர்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications