துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாக். மேட்சிற்கு முன்.. திடீரென அந்த வீரரை தனியாக அழைத்து.. நீண்ட நேரம் பேசிய தோனி.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

துபாய்: 2021 உலகக் கோப்பை டி 20 தொடரின் மிக முக்கியமான ஆட்டம் இன்று நடக்க உள்ளது. பாகிஸ்தான், இந்தியா அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான ஆட்டம் நடக்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

கடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் இந்தியா வெற்றிபெற்றுவிட்டது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்று இரண்டு ஜாம்பவான் அணிகளை இந்தியா பயிற்சி ஆட்டங்களில் வீழ்த்தி தற்போது தன்னம்பிக்கையுடன் இருக்கிறது.

விண்ணை தொடும் பெட்ரோல், டீசல் விலை.. மீண்டும் அதிகரிப்பு.. இன்றைய விலை நிலவரம்!விண்ணை தொடும் பெட்ரோல், டீசல் விலை.. மீண்டும் அதிகரிப்பு.. இன்றைய விலை நிலவரம்!

பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா எதிர்கொண்டு வருகிறது. கடந்த 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பின் மீண்டும் இப்போதுதான் டி 20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.

முக்கியமான ஆட்டம்

முக்கியமான ஆட்டம்

இதனால் பாகிஸ்தான் இந்தியா இடையிலான மேட்ச் இன்று கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் பாபர் ஆஸம், ரிஸ்வான், சாமான், ஹபீஸ், ஹசன் அலி போன்ற முக்கியமான வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியா பை லேட்டரல் தொடர்களில் பாகிஸ்தானை எதிர்கொண்டது கிடையாது என்பதால் இன்று இந்தியாவிற்கு பாகிஸ்தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

பயிற்சி

பயிற்சி

நேற்று முதல்நாள் வரை இந்திய அணி வீரர்கள் இந்த போட்டிக்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர். நேற்று பேட்ஸ்மேன்கள் மட்டும் நீண்ட நேரம் பயிற்சி எடுத்தனர். பொதுவாக ஆட்டத்திற்கு முதல்நாள் பவுலர்கள் அதிக நேரம் பயிற்சி எடுக்க மாட்டார்கள். பவுலர்கள் வார்ம் அப் பயிற்சி எடுப்பார்கள். அதன்பின் மீண்டும், போட்டி நாளன்று கொஞ்சம் வார்ம் அப் பயிற்சி எடுப்பார்கள்.

வார்ம் அப் பயிற்சி

வார்ம் அப் பயிற்சி

அதன்படி நேற்று பேட்ஸ்மேன்கள் மட்டும் நீண்ட நேரம் பயிற்சி எடுத்தனர். அதிலும் ஆச்சர்யமான ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தார். இன்னொரு பக்கம் பும்ரா மட்டும் பவுலிங் பயிற்சி செய்யாமல், நடந்தபடி வார்ம் அப் செய்து கொண்டு இருந்தார். இதில் நேற்று பாதி நாள் முழுக்க பும்ராவுடன் தோனி இருந்தார். ஆம் பும்ராவிற்கு தோனி ஆலோசனை வழங்கியபடி இருந்தார்.

பும்ரா ஏன்?

பும்ரா ஏன்?

தோனி இந்திய அணியின் ஆலோசகர் ஆனதில் இருந்தே அவர் பண்ட், இஷான் கிஷான் ஆகியோருக்கு கீப்பிங்கில் ஆலோசனை வழங்குகிறார். கோலி, ரோஹித் ஆகியோருக்கு கேப்டன்சியில் ஆலோசனை வழங்கி வருகிறார். ஆனால் நேற்று அதிசயமாக தோனி அதிக நேரம் பும்ராவுடன் நேரம் செலவு செய்தார். பாஸ்ட் பவுலருடன் நேற்று தோனி அதிக நேரம் பேசியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பும்ரா

பும்ரா

பும்ரா இந்திய அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவர். ஆனாலும் இவர் நல்ல பார்மில் இருந்தாலும் கூட கடந்த சில தொடர்களாக பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறி வருகிறார். முக்கியமாக ஐசிசி தொடர்களில் பும்ரா பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. இந்த நிலையில்தான் பும்ராவுடன் தோனி நீண்ட நேரம் பேசினார்.

எத்தனை ஓவர்

எத்தனை ஓவர்

நேற்று வலைப்பயிற்சியில் பும்ரா 6 ஓவர்கள் கூட போட்டு இருக்க மாட்டார். அவருக்கு தோனி மூலம் ஆலோசனை மட்டுமே வழங்கப்பட்டது. அந்த ஆலோசனைக்கு பின் சில ஓவர்களை வீசிவிட்டு பின் பும்ரா ஓய்வு எடுக்க சென்றார்.

English summary
India vs Pakistan match in the T20 world cup: Bumrah spent a lot of time with Dhoni during the practice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X