துபாயில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்! இந்தியர் நலவாழ்வு பேரவையின் மாபெரும் ரத்ததான முகாம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு நேற்று இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் 55வது ரத்ததான முகாம் அல் பரகா மருத்துவமனையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

Indian Independence Day

இந்த இரத்த தான முகாமுக்கு அமீரக இந்தியர் நலவாழ்வு பேரவை தலைவர் அப்துல் ஹாதி தலைமையில் நடைபெற்றது. துபாய் மண்டல செயலாளர் கீழக்கரை ஜைனுல் ஆபிதீன் , பொருளாளர் சேகு தாவூது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Indian Independence Day

இந்த முகாமிற்கு உடன்குடி கவின்முகில் முஹம்மது யூசுப், அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிபாகர், மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ், கார்டின் பல்கலைக்கழத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனர்
பேராசிரியர் முனைவர் சித்திரை பொன் செல்வன்,

Indian Independence Day

பிளசண்ட் டூரிசம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மாஜிதா பேகம், பிரைம் எ.ஐ. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நூர் ஃபாத்திமா, லால்பேட்டை ஜமாஅத் செயலாளர் ஹாஜா, அமீரக இந்தியர் நலவாழ்வு பேரவை பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் மற்றும் முன்னாள் மண்டல தலைவர் வி களத்தூர் பாரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

Indian Independence Day

100-க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு இரத்தக் கொடை செய்தனர். இரத்த தானம் செய்த சகோதர்களுக்கு சான்றிதழ் காலை மற்றும் மத்திய உணவு வழங்கப்பட்டது.

Indian Independence Day

எஸ்.எம். ஐ.மாநில துணை செயலாளர் பொதக்குடி ரியாஸ், இந்தியர் நலவாழ்வு பேரவை ஷார்ஜா மண்டல தலைவர் சலீம் ரப்பானி, அதிரை சேக் அப்துல் காதர், மன்னை அமீன், ஜலால், லால்பேட்டை கிளைத்தலைவர் யாசிர் அஹமது, அசாருதீன், மசூத் அகமது, தன்வீர், நயீம், பஜுல் மற்றும் நிர்வாகிகள் ஹோர் அல் அன்ஸ் பொறுப்பாளர் முத்துப்பேட்டை சாதிக், சத்திரம் சாகுல்,துளசி அமீர், அல்கூஸ் பொறுப்பாளர் அய்யூப் மற்றும் நிர்வாகிகள், உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் சிறந்த முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Indian Independence Day

இறுதியாக அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்த லால் பேட்டை சகோதர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+