துபாய் ஏர்போர்ட்டில் பிரசவ வலியால் துடித்த இந்திய பெண்.. செவிலியராக மாறி காத்த பெண் இன்ஸ்பெக்டர்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் விமான நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரின் உதவியோடு, இந்திய கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அவசரம் மற்றும் ஆபத்தான சூழலில் சரியான சமயத்தில் உதவிய பெண் ஆய்வாளரின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

துபாய் ஏர்போர்ட்டின் இரண்டாவது முனையத்தில் வேலை பார்க்கும் இந்திய பெண் ஒருவர், தனது பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அலறியடி கீழே சாய்ந்தார் அந்த பெண்மணி.

Indian woman in Quivered labor pain at Dubai Airport ..lady Inspector become nurse and saved woman

இதனை கண்ட சுற்றியிருந்த மக்கள் என செய்வது என்று தெரியாமல் விழித்தனர். அப்போது அப்பகுதிக்கு விரைந்த விமானநிலைய பெண் காவல் ஆய்வாளர் ஹனன் ஹுசைன் மொகம்மது, இந்திய பெண்ணின் நிலை கண்டு துரிதகதியில் இயங்கினார்.

கர்ப்பிணியான இந்திய பெண்ணை விரைவாக விமானநிலைய பரிசோதனை அறைக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். ஆனால் பிறந்த குழந்தை மூச்சு விடாததால், தாயையும் சேயையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

துபாய் விமான நிலைய பெண் ஆய்வாளர் ஹனன் ஹுசைனின் இந்த செயலை, விமான நிலைய உயரதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர். நம்பமுடியாத செயலை மனிதாபிமானம் மற்றும் நேர்த்தியான அணுகுமுறையால் செய்து, இந்திய பெண்ணையும் அவரது குழந்தையையும் காப்பாற்றியுள்ளார் என பாராட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+