அமெரிக்காவின் வருமானத்திற்கு ஆப்பு.. மிக முக்கிய இடத்தில் கை வைத்த ஈரான்! டிரம்ப் ஷாக்!
துபாய்: மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து வரும் வருமானத்தை விட, அதிக வருமானத்தை அராம்கோ எண்ணெய் நிறுவனம் மூலம் அமெரிக்கா அள்ளி வந்தது. தற்போது இந்த நிறுவனத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலால், நிறுவனம் மூடப்பட்டிருக்கிறது.
அராம்கோ என்றழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் கதை 1933-ல் தொடங்கியது. அப்போது, அமெரிக்காவின் ஸ்டாண்டர்ட் ஆயில் ஆஃப் கலிபோர்னியா சவுதியில் எண்ணெய் தேடும் உரிமத்தைப் பெற்றது. பல பத்தாண்டுகளாக, டெக்சாகோ, எக்ஸான், மொபில் போன்ற அமெரிக்க நிறுவனங்கள்தான் அராம்கோவை நடத்தி வந்தன.

இதனையடுத்து 1970-களில் சவுதி அரசு படிப்படியாக அதன் பங்குகளை வாங்கத் தொடங்கியது. 1980-ல் முழு உரிமையையும் அது பெற்றது. பின்னர், 1988-ல் 'சவுதி அராம்கோ' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இது ஒரு தேசிய நிறுவனமாக மாறியது.
அராம்கோவின் உலகளாவிய தாக்கம்
அராம்கோ என்பது வெறும் எண்ணெய் நிறுவனம் மட்டுமல்ல; அது உலக நிதிச் சந்தைகளையே அசைத்துப் பார்க்கும் ஒரு மாபெரும் சக்தி. 2025-2026 காலகட்டத்தில் அதன் ஆண்டு நிகர லாபம் சுமார் 130 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் லாபத்தை விட அதிகம்.
சுமார் 1.6 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன், அராம்கோ உலகின் மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது; எரிசக்தித் துறையில் இதுதான் முதலிடம். தினமும் 10 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து, உலகின் மொத்த எண்ணெய் தேவையில் 10%க்கும் அதிகமான பங்கை இது பூர்த்தி செய்கிறது.
அமெரிக்காவுடனான உறவு
'சவுதி அராம்கோ' எனப் பெயர் மாற்றப்பட்டிருந்தாலும், அமெரிக்காவுடனான அதன் தொடர்பு இன்றும் வலுவாகவே உள்ளது. அமெரிக்காவின் ஹாலிபர்டன், எஸ்.எல்.பி போன்ற நிறுவனங்களின் நவீன தொழில்நுட்பங்கள் அராம்கோவின் எண்ணெய் கிணறுகளிலும், சுத்திகரிப்பு நிலையங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
2025 இறுதிக்குள், அமெரிக்க நிறுவனங்களுடன் அராம்கோ சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. குறிப்பாக, இயற்கை எரிவாயு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகிறது.
இப்படி இருக்கையில்தான் இந்த நிறுவனத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் காரணமாக நிறுவனம் தற்போது மூடப்பட்டிருக்கிறது. தாக்குதலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எப்படி பார்த்தாலும் இது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. அள்ள அள்ள குறையாத பணம் கொட்டும் நிறுவனமாக இருந்த அராம்கோ, தற்போது மூடப்பட்டிருக்கிறது.
-
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications