துபாயில் ஸ்டாலின் பிறந்த நாள்.. இளைஞர் எழுச்சி நாளாக கோலாகல கொண்டாட்டம்
துபாய்: துபாயில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
கடந்த 02.03.18 சனிகிழமை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளான இளைஞர் எழுச்சி நாள் விழா, திமுக தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக, எவ்வித ஆடம்பரமுமின்றி தொழிலாளர்களுக்கு நல திட்டம் வழங்கும் விழாவாக துபாய் ஜெபல் அலி தொழிலாளர் முகாமில் நடைப்பெற்றது.

அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ். மீரான் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற விழாவை செயலாளர் சிம்மபாரதி தொகுத்து வழங்கினார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திமுகவை விட்டு பிரிந்து ஓராண்டு கூட நிறைவடையாததால், தன்னுடைய பிறந்தநாளை திமுகவினர் கொண்டாட கூடாது என்ற முக ஸ்டாலின் விடுத்திருந்த கட்டளைப்படி இந்த விழா மிகவும் எளிதாக நடைப்பெறுகிறது, என அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ் மீரான் தனது உரையில் கூறினார்.

நிகழ்ச்சியில் தொழிலாளர்களுக்கு தேவையான மிக்ஸி, மற்றும் உடைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 350 க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பலனடைந்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பவர் குரூப் ஜாஹிர் உசேன் அவர்களும், ஆடிட்டர் பிரின்ஸ் இளவரசன், பிளாக் துலிப் செந்தில்,முஸ்டாக் அஹமது, அழகேசன், ஆபிதீன்,ஏஜிஎம் பைரோஸ்கான், உதயநிதி ஸ்டாலின், ஹரிகரண், நற்பணி மன்ற பாலா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

எந்த ஆடம்பரமுமின்றி நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியை அமீரக திமுக துணை தலைவர் முஸ்தஃபா ஒருங்கிணைத்திருந்தார்.












Click it and Unblock the Notifications