டிரேட் மார்க் ஷாட்.கள். 'கிங்' என்பதை நிரூபித்த விராட் கோலி.. அணியை மீட்ட தருணம்.. செம பேட்டிங்!
துபாய்: இந்தியா மட்டுமின்றி உலகமே ஆவலுடன் பார்த்து ரசித்து கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் டி20 உலககோப்பை போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. போட்டியை நேரில் பார்ப்பவர்கள் இருந்தாலும், கிட்டத்தட்ட நாடு முழுவதும் ரசிகர்கள் டிவி முன்பு குடியிருக்கின்றனர்.
இந்த பிட்சில் இலக்கை துரத்தினால் எளிதாக வெற்றி பெற முடியும் என்பதால் டாசில் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் எந்தவித தயக்கமும் இன்றி பவுலிங் போடுவதாக அறிவித்தார்.

ஷாகின் அப்ரிடி
இது மிகச்சரியான முடிவு என்பது சிறிது நேரத்தில் தெரியவந்தது. மணிக்கு 140 கி.மீ-க்கு மேல் வீசும் பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தார். வாணவேடிக்கை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிட் மேன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஷாகின் அப்ரிடி வேகத்தில் வெளியேறினார். சரி இவராவது விளாசுவர் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில் கே.எல்.ராகுலும் ஷாகின் அப்ரிடி செம்மையான பவுலிங்கில் போல்டானார்.

கேப்டன் கிங் கோலி
சூர்யகுமாரும் விரைவில் நடையை கட்ட இந்தியா 31-3 என்ற பரிதாப நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் கேப்டன் கிங் கோலி இந்தியாவுக்கு கைகொடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடும் விராட் கோலி இந்த முறையும் அதனை செய்தார். தனது அக்மார்க் ஷாட்டுகள் மூலம் துவண்டு கிடந்த அணிக்கும், ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளித்தார்.

ஆகச்சிறந்த இன்னிங்ஸ்
49 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார் விராட் கோலி. இந்த போட்டியில் விராட் கோலி மட்டும் இவ்வளவு ரன்கள் எடுக்கவில்லை என்றால் இந்தியாவின் நிலை பரிதாபமாக இருந்திருக்கும். டி20 உலககோப்பையில் அதிக ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலி பொறுப்பாக விளையாடி அணியை மீட்டுள்ளார். கோலியின் இந்த ஆகச்சிறந்த இன்னிங்சை டுவிட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜடேஜா, ஹார்திக் பாண்ட்யா சொதப்பல்
விராட்கோலிக்கு ரிஷப் பண்டும் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தியா பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும் 151 என்ற சவாலான இலக்கை எட்டியுள்ளது. பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஜடேஜா, ஹார்திக் பாண்ட்யா சொதப்பல் ரசிகர்களுக்கு கவலையை எற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications