துபாயில் இஸ்ரேல் அதிபருடன் மோடி ஆலோசனை! பாலஸ்தீனம் மீதான யுத்தம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?
துபாய்: பிரதமர் திரு நரேந்திர மோடி துபாயில் நடைபெற்ற ஐநா பருவ நிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின்போது இஸ்ரேல் நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக்-ஐ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இஸ்ரேல் நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக்குடனான சந்திப்பின் போது அந்தப் பிராந்தியத்தில் நடந்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயி\ரிழப்புகளுக்கு தமது இரங்கலை பிரதமர் தெரிவித்தார். பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் பிரதமர் மோடி வரவேற்றார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தை மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வு காண இந்தியா ஆதரவு வழங்கும் என்று கூறினார்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் வெற்றிக்காக இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்தார்.
அமீரக அதிபருடன் சந்திப்பு: இம் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார். சிஓபி-28 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக ஷேக் முகமது பின் சயீதுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். சிஓபி -28 இல் பசுமை காலநிலை திட்டம் (ஜி.சி.பி) குறித்த உயர்மட்ட நிகழ்வை இணைந்து ஏற்பாடு செய்ததற்காக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இரு தலைவர்களும் தங்கள் பரந்த மற்றும் துடிப்பான இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்தனர். இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் உச்சிமாநாட்டிற்கு வருமாறு அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
ஐநா பொதுச்செயலாளர் குட்டரெஸ்: ஐநா சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ்சை சந்தித்தார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் போது ஐநா பொதுச்செயலாளர் வழங்கிய ஆதரவுக்காக அவருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பருவநிலை இலக்குகளை அடைவதில் இந்தியாவின் முன்முயற்சிகள் மற்றும் முன்னேற்றத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.
பருவநிலை நடவடிக்கைகள், பருவநிலை நிதி, தொழில்நுட்பம் போன்றவை, பலதரப்பு நிர்வாகம் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பாக வளரும் நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். நிலையான வளர்ச்சி, பருவநிலை நடவடிக்கைகள், பல்நோக்கு மேம்பாட்டு வங்கி சீர்திருத்தங்கள் மற்றும் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் இந்தியாவின் முயற்சிகளை ஐநா பொதுச் செயலாளர் பாராட்டினார். பிரதமரின் பசுமைக் கடன் திட்டத்தை அவர் வரவேற்றார். இந்தியாவின் தலைமைத்துவப் பணிகளை 2024-ஆம் ஆண்டின் ஐநா உச்சிமாநாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் ஐநா பொதுச்செயலாளர் பிரதமரிடம் உறுதியளித்தார். இதேபோல் பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications