துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒற்றை கையால் பவரை காண்பித்த ரிஷப் பண்ட்.. மிரண்டு போன கோலி.. அதிரடி சிக்ஸர்கள்!

Google Oneindia Tamil News

துபாய்: இந்தியா-பாகிஸ்தான் டி20 உலககோப்பை போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்! தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

இந்திய பேட்ஸ்மேன்கள் நிலை

இந்திய பேட்ஸ்மேன்கள் நிலை

ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படி மோசமாக விளையாடுவர்கள் என்று பாகிஸ்தான் கேப்டனே நினைத்து பார்த்து இருக்க மாட்டார். 'பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்' வீரர் ஷாகின் அப்ரிடி வேகத்தில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், கே..எல்.ராகுல் ஒற்றை இலக்க ரன்னிலும் பெவிலியனுக்கு திரும்பினார்கள். சூர்யகுமாரும் மோசமாக அவுட்டாகி சென்றார்.

மிரட்டிய ரிஷப் பண்ட்

மிரட்டிய ரிஷப் பண்ட்

31-3 என்ற பரிதாப நிலையில் இருந்த இந்திய அணியை கேப்டன் விராட் கோலியும், ரிஷப் பண்டும் மீட்டனர். ஒரு பக்கம் தனது தனித்துவமான ஷாட்கள் மூலம் விராட் கோலி ரன்கள் சேர்த்தாலும், அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் ரிஷப் பண்ட்.. ஐ.பி.எல்.லில் சிறப்பாக இருந்த பார்மை அப்படியே இன்று காண்பித்தார் ரிஷப் பண்ட்.

 2 சிக்ஸர்கள்

2 சிக்ஸர்கள்

தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் சிறப்பான சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தானை அச்சுறுத்தினார். அதுவும் ஹசன் அலி ஓவரில் அவர் தொடச்சியாக அடித்த 2 சிக்ஸர்களை மீண்டும், மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஏனெனில் அந்த இரு சிக்ஸர்களையும் ஒற்றை கையில் அடித்து மிரட்டினார் ரிஷப் பண்ட்.

கோலி மிரண்டு போனார்

கோலி மிரண்டு போனார்

இரண்டு கையால் வேகமாக அடித்தே சில பேட்ஸ்மேன்களால் சிக்ஸர் அடிக்க முடியாத நிலையில் ரிஷப் பண்ட் ஒற்றை கையால் சிக்ஸர் அடித்ததை பார்த்து எதிரே இருந்த கேப்டன் கோலி மிரண்டு போனார். அவர் ரிஷப் பண்டை உற்சாகப்படுத்தி வெகுவாக பாராட்டினார். இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

English summary
Rishabh Pundt today showed the same style that was the best in the IPL. He stumbled a bit in the beginning but then threatened Pakistan by hitting excellent sixes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X