இன்னுமா நம்பள இந்த ஊர் நம்புது?..இந்த மூன்றும் நடந்தால் செமி ஃபைனலுக்கு இந்தியா போகும்...நடக்குமா?
நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐசியூவில் இருந்த இந்திய வெற்றி வாய்ப்பை சற்று ஜெனரல் வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் இந்திய அணியினர். நமது வெற்றிக்கு நாம் போராடும் வாய்ப்பை எல்லாம் கோட்டைவிட்டு விட்டு அடுத்தவர் தோற்றால் நமக்கு வாய்ப்பு எனும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது இந்திய அணி.
ஏதாவது வாய்ப்பு இருக்காப்பா? என்று கேட்கும் ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது. மூளையைப்போட்டு கசக்கி பிழிந்து வெற்றி வாய்ப்பு பக்கம் மட்டுமே சிந்தித்து ஏதோ தூரத்தில் தெரியும் வாய்ப்பை பெரிதாக பூதக்கண்ணாடி வைத்து இதை எழுதியுள்ளோம். சேதாரம் ஏற்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல.
முதலில் இந்திய அணி உடைத்த பர்னிச்சர்கள் என்னென்ன பார்ப்போம். பெரிதாக உலக கோப்பையையே வெல்லும் அணி என்று மமதையுடன் இறங்கியது இந்திய அணி. அதெல்லாம் சரி அதுக்கு ஆடவேண்டும் அல்லவா? அதைவிட டாஸ் ஜெயிக்க வேண்டும், கோலிக்கும் டாஸ் வெல்லுவதற்கும் ஏழாம் பொருத்தம், கேட்க வேண்டுமா, துபாய் கிரவுண்டில் டாஸ் வென்று போலிங் எடுப்பவர்கள் மட்டுமே வெல்ல முடியும் என்கிற நிலையில் டாஸை தோற்றார்கள்.

2 வருடத்துக்கு முன் பார்த்த பாகிஸ்தான் என இளக்காரமாக இறங்க நன்றாக பயிற்சி எடுத்து வந்த சார்பட்டா பரம்பரை கபிலன் போல் வந்து டான்சிங் ரோசான நம்மை தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள். அட அந்தக்காயம் மறைவதற்குள் அதே மைதானத்தில் நியூசிலாந்திடம் அதேப்போன்று டாஸை தோற்று அதேபோல் அடி வாங்கினோம். அப்புறம் தான் நமக்கு நாம் முனைப்புடன் ஆடவில்லை என்று கண்டுபிடித்தோம், அதற்குள் நமது கோப்பை வாய்ப்பு கையை விட்டு போனது.
அதன் பிறகு அடுத்த டீம் ஆடுவது நமக்கு சாதகமாக அமையுமா என பொருளாதார நிபுணர்கள் அளவுக்கு கிரிக்கெட்டை அலசி விட்டோம். ஆட்டோவில் பயணிக்கும்போது ஓட்டுநர் இந்திய அணியின் செமி ஃபைனல் வாய்ப்பு எப்படி இருக்குன்னு கேட்க நாம் நமக்கு தெரிந்த (?) புள்ளி விவரங்களை 23 ஆம் புலிகேசி போல் அள்ளிவிட அடப்போங்க சார் இவர்கள் இப்படி ஆடினால், நாம அப்படி ஆடினால் இப்படி ஆட்டம் போக்கு போச்சுன்னா செமி ஃபைனல் போகலாம்னு அவர் அடுக்கடுக்காக சொல்ல அடேங்கப்பா பெட்ரோல் விலை புள்ளி விவரத்தைவிட இது பயங்கரமாக இருக்கே இதுன்னு ஆச்சர்யமா போச்சு. ஆட்டோ ஓட்டுநர் கிரிக்கெட் அறிவு முன் நம் அறிவு புறமுதுகிட்டு ஓட அவர் சொன்னதை அப்படியே பதிவிடுகிறேன்.
நேற்று ஆப்கனுடன் இந்தியா திட்டமிட்டு ஆடினார்கள், அதிலும் ராகுல், ரோஹித் ஆட்டம் அபாரம். என்ன 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கன் கதையை முடித்திருந்தால் ரன் ரேட் நமக்கு ஏறி இருக்கும் ஆப்கனுக்கும் குறைந்திருக்கும். இனி என்ன நடந்தால் நாம் செமி ஃபைனல் போக முடியும்? முதலில் நாம் இதேபோல் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியாவை பெரிய ரன் ரேட்டில் வெல்ல வேண்டும்.
அதற்கு ஆப்கனுடன் ஆடியதுபோல் அதிரடின் ஆட்டம் ஆட வேண்டும், முதலில் அவர்கள் பேட் செய்தால் குறைந்த ரன்னில் சுருட்டி அதையும் குறைந்த ஓவரிலேயே நாம் அடிக்க வேண்டும்(இதெல்லாம் நடக்கக்கூடியதா) இதை செய்தால் நாம் செமி ஃபைனல் போய் விட முடியுமா? அதெப்படி அண்ணன் நியூசிலாந்து நமக்கு முன்னாள் நிற்கிறாரே.
அடுத்தப்படியாக நியூசிலாந்து ஆப்கனிடம் தோற்க வேண்டும். ஆப்கன் வென்றால் அவர்களுக்கு வாய்ப்பு வருமேன்னு கேட்கலாம். அதற்குத்தான் முன்னரே சொன்னது நமீபியாவையும், ஸ்காட்லாந்தையும் அதிக ரன் ரேட்டில் வெல்லணும் என்று. அது மட்டுமல்ல நியூசிலாந்தும் ஆப்கனிடம் தோற்கும்போது அதிக ரன் ரேட் வித்தியாசம் இருக்கக்கூடாது. இதெல்லாம் நடந்தால் ரன் ரேட் அடிப்படையில் நாம் செமி ஃபைனலுக்கு போகலாம். இந்த 3-ம் நடக்குமா? நாம் செமி ஃபைனலுக்கு போவோமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அது சரி இன்று நியூசிலாந்து ஆப்கனை வென்று விட்டால். அப்பவும் நம்பிக்கையுடன் காத்திருப்போம், நமீபியா நியூசிலாந்தை வென்றால் வாய்ப்பு உள்ளது. போங்க சார் அத்தைக்கு மீசை முளைப்பது எப்போது சித்தப்பாவாக மாறுவது எப்போது என்று கேட்கிறீர்களா? நம்பிக்கைத்தான் வாழ்க்கை சார்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications