'த்ரோடவுன்ஸ்..' ஈகோ பார்க்காத தோனி.. இந்திய வெற்றிக்காக என்னல்லாம் பண்றாரு பாருங்க தல.. செம!
துபாய்: இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி ஆலோசகர் தோனி வேறு லெவலில் பேட்ஸ்மேன்களை தயார்படுத்தி வருகிறார்.
Recommended Video
ஒரு பயிற்சியாளர் செய்ய வேண்டிய வேலைகளையும் தாண்டி, நெட் பவுலர் அளவுக்கு போய் விட்டார் தோனி. தானே வீரர்களிடம் இருந்து பயிற்சி கொடுத்தால்தான், அவர்களின் பிளஸ் மற்றும் மைனஸ் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் தோனியின் இந்த புது அவதாரத்திற்கு காரணம்.
அப்படி என்ன செய்தார், ஏன் தோனி போட்டோ வைரலாக சுற்றி வருகிறது.. இதுதான் விஷயம்.

இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, நாளை, டி20 உலக கோப்பை சூப்பர்-12 சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த உலக கோப்பையின் முதல் போட்டி இதுதான். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, அணி வீரர்களும் டென்ஷனோடு உள்ளனர்.

ரிஷப் பண்ட்டுக்கு பயிற்சி
இந்த நிலையில்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த ஆட்டங்களின்போது, ஆலோசகர் தோனி, இந்திய அணியின் வீரர்களை தனித்தனியே சந்தித்து ஆலோசனைகளை வழங்கி வந்தார். ரிஷப் பண்டுக்கு விக்கெட் கீப்பிங் பயிற்சியை கூட அவர் வழங்கினார்.

புது அவதாரம்
ஆலோசனை வழங்குவதோடு பயிற்சி அளிக்கும் அளவுக்கு தோனி செல்ல காரணம் கிரிக்கெட் மீதான அவரது ஈடுபாடுதான். தோனி ஒரு விக்கெட் கீப்பர். எனவே ரிஷப் பண்ட்டுக்கு அவர் கோச் செய்தது ஓகே. ஆனால் அதையும் தாண்டி இப்போது வேறு புது அவதாரம் எடுத்துள்ளார் தோனி.

த்ரோடவுன்ஸ் வேலை
ஆம்.. த்ரோடவுன்ஸ் வேலையிலும் தோனி தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அது என்ன த்ரோடவுன்ஸ் என்கிறீர்களா. வலைப்பயிற்சியின்போது பந்து வீச்சாளர்களால் தொடர்ந்து பந்து வீச முடியாது. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு நிறைய பந்துகளை சந்திக்க வேண்டும் என்ற தேவையும், ஆசையும் இருக்கும். இதை பூர்த்தி செய்ய நெட் பவுலர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வீச முடியாது. எனவே த்ரோடவுன்ஸ் எனப்படும் பந்தை த்ரோ வகையில் வீசும் உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

நீளமான குச்சி
இதில் சைடு ஆர்ம் என்ற ஒரு வகை த்ரோவும் உண்டு. இப்படியாக பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி அளிக்க தொழில்முறை பவுலர்களை தாண்டி உதவியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் தொழில்முறை பவுலர்கள் இல்லை என்பதால், கைகளை வைத்து சும்மா பந்து போட்டால் அவர்களால் ரொம்ப வேகமாக வீச முடியாது. மீடியம் வேகத்தில்தான் பந்துகள் வரும். அதை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு ஈஸியாக இருக்கும். இதற்காகத்தான் ஒரு உபகரணம் உள்ளது. குச்சிபோல நீளமான அந்த உபகரணத்தின் முடிவில் ஒரு கப் இருக்கும். அதற்குள் பந்தை வைத்து எறியும்போது, அது வேகமாகவும், பவுன்ஸ் ஆகியும் வரும்.

வெற்றி நிச்சயம்
இதெல்லாம் உதவியாளர்கள் செய்யும் வேலை. ஆனால் தோனி தனது கையில் அதுபோன்ற குச்சியை எடுத்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். அவர் ஈகோ பார்க்கவில்லை. நேற்று வலைப் பயிற்சியின்போது தோனி இவ்வாறு செய்ததை பிசிசிஐ தனது ட்விட்டர பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. தோனி எந்த அளவுக்கு அர்ப்பணிப்போடும், வெற்றி பெறும் வேட்கையோடும் உள்ளார் என்பதை ஒரு உதவியாளர் செய்யும் வேலையை கூட அவரே ஏற்று செய்வதை வைத்து பார்த்தால் தெரிகிறது என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications