18 வருடங்களாக ஒரு ஐசிசி போட்டியிலும் இந்தியா, நியூசிலாந்தை வென்றது இல்லை.. இதுதான் யோசிக்க வைக்கிறது

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐசிசி தொடர்களில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தி 18 வருடங்களாகிறது. கடைசியாக 2003ம் ஆண்டு நாம் வெற்றி பெற்றதுதான். இதன்பிறகு நியூசிலாந்து மட்டுமே வென்றுள்ளது. எனவே, நாளை நடைபெற உள்ள இந்தியா-நியூசிலாந்து இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட வாழ்வா, சாவா என்ற நிலையில் இரு அணிகளும் மோத உள்ள நிலையில் கடந்த கால புள்ளி விவரங்கள் நமக்கு சற்று சோர்வை அளிப்பதாக இருக்கிறது.

ஆனால், இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பையில் வென்றதே கிடையாது என்ற நிலையை பாகிஸ்தான் மாற்றியபோது, நம்மால் இதை செய்ய முடியாதா என்ன என்ற ஒற்றை நம்பிக்கை ரசிகர்களை உத்வேகத்தில் வைத்துள்ளது.

2003 கங்குலி அணி

2003 கங்குலி அணி

2003ம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை இறுதி வரை சென்றது. அப்போது ஆஸ்திரேலியா தவிர எந்த அணியோடும் இந்திய அணி தோல்வியே தழுவவில்லை. ஜாகீர் கான், ஸ்ரீநாத், நெஹ்ரா வேகப் பந்து கூட்டணி பட்டையை கிளப்பியது. சச்சின், யுவராஜ் சிங் ஆகியோரின் அதிரடிகள் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றது. அந்த தொடரில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியிருந்தது. ஆனால் இதன்பிறகு வேறு எந்த ஐசிசி தொடரிலும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்த முடியவில்லை.

தோனி அணி

தோனி அணி

2007ம் ஆண்டு, 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வென்றது. ஆனால், அப்போதும் கூட நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியை தழுவ நேரிட்டது. 2016 டி20 உலக கோப்பையிலும் நியூசிலாந்துதான் இந்திய அணியை வீழ்த்தியது. 2019ம் ஆண்டு, ஒருநாள் உலக கோப்பை போட்டி அரையிறுதியில், 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து இந்தியாவை வென்றிருந்தது.

Recommended Video

    T20 World Cup 2021 : Ind Vs NZ இந்திய அணி வென்றதே இல்லை | Oneindia Tamil
    விராட் கோலி அணி

    விராட் கோலி அணி

    சில மாதங்கள் முன்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியிருந்தது. இப்படி நியூசிலாந்திடம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது இந்தியா. நாளையை போட்டியில் இதற்கு இந்தியா முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    20 ஓவர் போட்டிகள்

    20 ஓவர் போட்டிகள்

    சில மாதங்கள் முன்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியிருந்தது. இப்படி நியூசிலாந்திடம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது இந்தியா. நாளைய போட்டியில் இதற்கு இந்தியா முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    விராட் கோலி விஸ்வரூபம் எடுப்பாரா?

    விராட் கோலி விஸ்வரூபம் எடுப்பாரா?

    ரோகித் ஷர்மா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டமாக ஆடி அவுட்டானார்கள். இந்த முறை ஓப்பனிங் சிறப்பாக இருந்தாக வேண்டும். விராட் கோலி, ஐசிசி போட்டிகளில் புலியாக மாறுவார். புலியின் சீற்றத்தை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பார்க்க முடிந்தது. அது நியூசிலாந்துக்கு எதிராக பாய்ந்து தாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இந்திய அணி

    இந்திய அணி

    இந்திய அணியில், ரோகித் ஷர்மா, ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, ஷமி ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+