ஏழை தொழிலாளி டூ லட்சாதிபதி.. ஒரே நாளில் மாறிய வாழ்க்கை! லாட்டரியில் கேரள நபர்களுக்கு அடித்த யோகம்
துபாய்: கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என சொல்வதை நிஜமாக்கும் வகையில் கேரளாவை சேர்ந்த இரண்டு பேருக்கு அதிர்ஷ்ட காற்று பலமாக வீசியுள்ளது. அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் தலா 10 லட்ச ரூபாய் பரிசாக அடித்துள்ளது. பிழைப்புக்காக கடல் கடந்து வேலைக்கு சென்றர்களுக்கு தற்போது பணமழை கொட்டியுள்ளது.
சூர்ய வம்சம் படத்தில் வரும் சரத்குமார் போல ஒரே பாட்டில் பணக்காரர் ஆகிவிடமாட்டோமோ என பலரும் பகல் கனவு காண்பார்கள். இதெல்லாம் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் நடந்துவிடாது என்பதுதான் நிதர்சனம் என்றாலும் கூட.. ஒரு சிலரின் வாழ்க்கையை புரட்டி போடும் சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

தினமும் அன்றாடம் வேலை செய்து குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் இருக்கும் சிலருக்கு கூட லாட்டரியில் பணம் அடித்து பல கோடிகளுக்கு அதிபதியாவதையும் பார்க்க முடிகிறது. லாட்டரியில் பணத்தை இழந்து நிம்மதியை இழந்து தவிப்பவர்கள்தான் அதிகம் என்றாலும் கூட ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் கொட்டி வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுகிறது.
கேரளாவில் சாதாரண ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ.25 கோடி ஓணம் பம்பரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரிசாக அடித்தது. கடன் தொல்லையால் வெளிநாட்டிற்கு வேலைக்கு போக திட்டமிட்டு இருந்தவர் உள்ளூரிலேயே கடைசியில் கோடீஸ்வர் ஆனார். இப்படி ஆங்காங்கே பலரையும் பொறாமை பட வைக்கும் விதமாக சில நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
அப்படியான ஒரு சம்பவம் தான் கேரளாவை சேர்ந்த இருவருக்கு நடந்துள்ளது. ஓமனில் ஃபோர்க்லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் ரமேஷ் தனபாலன் (வயது 49). கேரளாவை சேர்ந்த இவர் குழுக்களாக சேர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கத்தை வைத்துள்ளார்.. அந்த வகையில், கடந்த மாதத்திற்கான லாட்டரியை வாங்கியிருக்கிறார்கள். இதில்தான், 2,50,000 திர்ஹாம் பரிசாக அடித்துள்ளது.
இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் பரிசாக அடித்துள்ளது. தனக்கு பரிசாக லாட்டரி அடித்தது பேசிய ரமேஷ் தனபாலன் தற்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் எனக்கு மட்டும் கிடைத்தது இல்லை. குழுவில் உள்ள 54 நண்பர்களுக்கும் கிடைத்த பரிசு. அனைவரும் சரி சமமாக பங்கிட்டு கொள்வோம். ஆறு ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வருகிறேன். தற்போதுதான் பரிசு அடித்துள்ளது" என்றார்.
ரஷித் பழக்கரா (வயது 36) சவுதி அரேபியாவில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். சவுதி அரேபியாவில் உள்ள கடைசியில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வரும் ரஷித் கடந்த சில மாதங்களாக லாட்டரி வாங்கி வந்துள்ளார். தற்போது இவருக்கும் ரூ.10 லட்சம் பரிசாக அடித்துள்ளது.
தற்போது 10 லட்சம் பரிசு அடித்து இருப்பதால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரஷித், எனக்கு இது கொண்டாட்டம் இல்லை திருவிழா எனக் கூறினார். தொடர்ந்து டிக்கெட் வாங்குவேன் என்றும் அவர் கூறினார். லாட்டரியில் ஒரு சிலருக்கு இப்படி பணம் அடித்தாலும் பலருக்கும் பெரும் பொருளாதார இழப்பே மிச்சமாகிறது என்றும் லாட்டரி விளையாடுபவர்கள் அதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.












Click it and Unblock the Notifications