துபாய் தங்கம் ஏன் உலகிலேயே நம்பர்-1? விலையிலும் அதிரடி மாற்றம்! இப்போது வாங்குவது லாபமா? நஷ்டமா?

Subscribe to Oneindia Tamil

துபாய்: உலகம் முழுவதையும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் இடமாக துபாய் எப்போதும் இருந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் வாங்குபவர்களுக்கும், அதில் முதலீடு செய்பவர்களுக்கும் துபாய் தான் எப்போதுமே முதல் சொர்க்கம்.. அந்தவகையில், இந்த தங்கம் ஏன் உலகிலேயே நம்பர்-1 என்று அழைக்கப்படுகிறது என்பதையும், இப்போது வாங்குவது உங்களுக்கு லாபமா அல்லது நஷ்டமா என்பதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

கடந்த மார்ச் 2026-ல் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரணமான அரசியல் சூழல்கள் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக உலக பொருளாதாரமே ஒருவித நடுக்கத்தில் இருக்கிறது.

Dubai Gold

பங்குச்சந்தைகள் மற்றும் கிரிப்டோ சந்தைகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அனைவரது பார்வையும் இப்போது துபாய் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.. துபாய் தங்கத்தின் விலையில் இப்போது ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..

துபாய் தங்கம் நம்பர் - 1

துபாய் தங்கம் உலகப் புகழ் பெற்றதற்கு மிக முக்கியமான காரணம் அதன் தரம் தான்.. அங்கே விற்கப்படும் ஒவ்வொரு தங்க நகையும் துபாய் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும்.. ஏமாற்று வேலைகளுக்கு துளியும் இடமில்லாத ஒரு சந்தை என்றால் அது துபாய் தான்.

அதனால்தான் உலகின் பெரிய கோடீஸ்வரர்கள் முதல் சாதாரண நடுத்தர மக்கள் வரை அனைவரும் தங்களது சேமிப்பை துபாய் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.. தரமான தங்கம், சரியான எடை, மற்றும் அரசாங்கத்தின் உத்தரவாதம் இவை மூன்றும் தான் துபாயை உலகிலேயே முதலிடத்தில் வைத்திருக்கிறது.. குறிப்பாக 24 கேரட் தங்கத்தின் தூய்மையில் துபாய் எப்போதுமே சமரசம் செய்து கொள்வதில்லை..

தங்கத்தில் விலை மாற்றங்கள்

இப்போதைய விலை மாற்றங்களை பார்த்தால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக துபாயில் தங்கத்தின் விலையில் ஒருவிதமான ஏற்ற இறக்கம் நிலவுகிறது..

மார்ச் 17, 2026 நிலவரப்படி, சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.. சென்னையில் 10 கிராம் தங்கம் ₹1.57 லட்சத்தைத் தாண்டி விற்கப்படும் வேளையில், துபாயில் இது சுமார் ₹1.51 லட்சம் அளவிலேயே கிடைக்கிறது.. அதாவது ஒரு பவுன் தங்கத்திற்கு பல ஆயிரம் ரூபாய் வரை வித்தியாசம் கிடைக்கிறது..

முதலீட்டார்களுக்கு லாபம்

இந்த விலை சரிவு ஒரு சூப்பர் சான்ஸாகவே பார்க்கப்படுகிறது.. இறக்குமதி வரிகள் இல்லாத காரணத்தால், இந்தியாவோடு ஒப்பிடும்போது துபாயில் தங்கம் வாங்குவது உங்களுக்கு நேரடியாக லாபத்தை அளிக்கும்..

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற இக்கட்டான காலங்களில் தங்கத்தில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

போர் மற்றும் அரசியல் மோதல்கள் ஏற்படும் போது மற்ற சொத்துக்களின் மதிப்பு குறையலாம், ஆனால் தங்கத்தின் மதிப்பு எப்போதும் உயரும்.. துபாய் தங்கத்தை நீங்கள் எங்கு வாங்கினாலும் சர்வதேச சந்தையில் அதற்குரிய முழு மதிப்பு அப்படியே கிடைக்கும்.. அதனால் கையில் பணம் இருப்பவர்கள் இப்போது சரிந்துள்ள இந்த விலையைப் பயன்படுத்தி தங்கம் வாங்குவது எதிர்காலத்தில் பல மடங்கு லாபத்தைக் கொடுக்கும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

இந்தியாவில் தங்கம் விலை

மொத்தத்தில், தரம் மற்றும் விலையில் துபாய் தங்கத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை.. இப்போதைக்கு விலை சற்று குறைந்துள்ளதால், இது முதலீடு செய்வதற்கு மிகச்சரியான நேரமாகும்..

அதேசமயம் இந்தியாவிற்கு தங்கம் கொண்டு வரும்போது பயணிகள் அந்தந்த நேரத்தைய சுங்க வரி விதிகளை மட்டும் சரியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.. எது எப்படியோ, உங்கள் பணத்திற்கு முழுமையான மதிப்பும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், துபாய் தங்கம் தான் உங்களுக்கான சிறந்த தேர்வாக அமையும் என்று வலியுறுத்துகிறார்கள் நிபுணர்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+