அவசரமாக கூடும் அரபு நாடுகள்.. பாலஸ்தீன்-இஸ்ரேல் போரில் அடுத்து என்ன? உலகமே நோக்கும் அரபு லீக் மாநாடு
ரியாத்: பாலஸ்தீன் - இஸ்ரேல் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று சவூதி அரேபியாவில் அரபு லீக் அவசர உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
பாலஸ்தீனின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அகதிகள் முகாம், மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி பல ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், முதியோர்களை கொன்று குவித்து வருகிறது. பாலஸ்தீன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என அரபு நாடுகள் உட்பட பல நாடுகள், ஐநா அமைப்பு, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இஸ்ரேல் அதை காதில் வாங்காமல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. அதற்கு ஹமாஸ், ஏமன் ஹௌதி போராளிகள், லெபனான் ஹிஸ்புல்லா படையினர் என பல தரப்பில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த போர் தொடர்பாக அரபு லீக் அவசர மாநாடு சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரபு லீக் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அந்த மாநாட்டில் சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஈராக், சைப்ரஸ், ஜோர்டான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. அவர்கள் ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள், கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் வசித்து வரும் பாலஸ்தீனியர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அந்த மாநாடு நடந்து முடிந்து 20 நாட்கள் கழித்து மீண்டும் அரபு லீக் நாடுகள் அவசர கூட்டத்தில் கூட்டி இருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அரபு லீக் அவசர உச்சி மாநாடு நடைபெற உள்ளதால் அந்த நகரைச் சூற்றி பாதுகாப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்துவரும் போர் மற்றும் காசா பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மனிதாபிமான உதவிகள் குறித்து ஆலோசிக்க அனைத்து நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வருகை தருகிறார்கள். பாலஸ்தீன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான ராஜாங்க முயற்சிகளை சவூதி அரேபியா மேற்கொண்டு உள்ளதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சவூதி அரேபியா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications