சட்ட சபையில் அன்று ஏசி இல்லை.. இன்னைக்கு ஏசி இருக்கிறது.. ஈவிகேஎஸ் இளங்கோவன் கலகல பேட்டி
ஈரோடு: ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்ட சபையில் 38 ஆண்டுகளுக்கு முன்பு ஏசி இல்லை தற்போது ஏசி இருக்கிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொதிகுதியில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் நகைச்சுவையாக பதிலளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு ஈவிகேஸ் இளங்கோவன் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுமூகமாக நடைபெற்றது
எம்.எல்.ஏவாக பதவியேற்பு எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். சபாநாயகர் அதை தெரிவிப்பார் என்று நினைக்கிறேன். வெற்றிக்கு காரணம் பணம் என்று அதிமுகவினர் சொல்லலாம். அதிமுக வேட்பாளராக நின்றவர் தென்னரசு. வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொண்டது. எந்த தவறும் நடக்கவில்லை. ஈரோட்டை பொறுத்தவரை நாங்கள் நாகரீகமானவர்கள் எந்த தவறும் நடக்கவில்லை என்று பேட்டி அளிக்கும் போது கூறினார்.

சூழ்நிலைக்கு ஏற்ப காலங்கள் மாறும்
இரண்டு நாட்கள் கழித்து தோல்வி அடைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொடுத்ததை அவர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப காலங்கள் மாறும் போது 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு எல்லா தேர்தலிலும் கூட்டணிகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு கூட்டணிகள் மாறும் போது அரசியல் நிலைகள் மாறும் போது அதற்கேற்ப கருத்துக்களை சொல்வது இயல்புதான். நான் தவறான கருத்தை ஒரு காலத்தில் சொன்னால் அதை திருத்திக்கொள்வதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையில் அன்று ஏசி இல்லை
அப்போது , 34 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்திற்குள் செல்ல இருக்கிறீர்கள்.. அதை எப்படி உணருகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், "சட்டசபையில் அன்று ஏசி இல்லை.. இன்று ஏசி இருக்கிறது" என்று சிரித்தபடி பதிலளித்தார். தொடர்ந்து, சட்ட சபை காங்கிரஸ் தலைவர் பதவி உங்களுக்கு கிடைக்கும் என்று எதிபார்க்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்து கூறியதாவது:- இப்போது தலைவராக இருக்கிறவரே நன்றாகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அதில் மாற்றங்கள் வேண்டும் என்று சொல்வதற்கு ஒன்னும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயக்குமாரை விமர்சித்த இளங்கோவன்
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெயக்குமாருக்கு தினம் தோறும் கெட்ட கனவு வரும். அதை தினம் தோறும் வெளியில் சொல்லிக் கொண்டு இருப்பார். அவர் மீது நிறைய வழக்குகள் இருக்கிறது. அதை பார்த்து அவரை காப்பாற்றிக்கொள்ள சொல்லுங்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை பிறகு அவர் சொல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications