அதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது... தினகரன் ஆரூடம்
ஈரோடு: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறுகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருவதாக தெரிவித்தார்

ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 ஆயிரம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளதை குறிப்பிட்டு பேசிய தினகரன், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்? என்று கேள்வி எழுப்பினார்.
விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதற்கு தினகரன் ஆதரவு தெரிவித்தார். விவசாயிகளுக்கு எப்போதும் உற்ற தோழனாகவே இருப்போம் என்று தெரிவித்தார்.
பட்ஜெட்டில் நீர்நிலைகளை தூர்வார 300 கோடி ஒதுக்கியும் எந்த பிரோஜனமும் இல்லை என்று கூறிய அவர், மேட்டூர் அணை நீர் கடலில் கலந்தது தான் மிச்சம் என்றார். ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களை எதிர்த்தாரோ, அதை எல்லாவற்றையும் எடப்பாடி அரசு ஆதரிப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதப்பதாகவும், அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்றும் தினகரன் கூறினார்.
-
ஆமை புகுந்த வீடான அதிமுக.. ஆசை காட்டி மோசம் செய்த லீமா? வேதனையில் வேலுமணி.. ரெடியான சிவி சண்முகம்! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி -
ஐயா கப்பல்ல வேலைன்னு.. அந்த ’வளந்தவன்’ சொன்னதை நம்பி! வேலுமணி போனை எடுக்காத ’ஷா’.. அதிருப்தி அதிமுக! -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும்.. பாவம்! தவெகவை பங்கம் செய்த அதிமுக ஜெயக்குமார் -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்!











Click it and Unblock the Notifications