"ராஜ் கவுண்டர்".. மீண்டும் மீண்டும் சொன்ன உதயநிதி ஸ்டாலின்.. சமூக நீதி மாநாட்டில் சர்ச்சை பேச்சு
ஈரோடு: ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ராஜ் கவுண்டர் என்ற பெயரை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. முக்கியமாக தவெக, அதிமுகவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.
ஈரோட்டின் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் வெல்லட்டும் சமூக நீதி' என்ற மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மாநாட்டின் பெயர் வெல்லட்டும் சமூக நீதி. ஆனால் மாநாட்டில் அடிக்கடி உதயநிதி ஸ்டாலின் ராஜ் கவுண்டர் என்ற பெயரை கூறினார்.

இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் ராஜ் கவுண்டர். அதனால் அவருக்கு நன்றி என்று சொல்லித்தான் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார். ராஜ் கவுண்டருக்கு நன்றி என்று பேச ஆரம்பித்தவர்.. தனது பேச்சு முழுக்க முழுக்க மீண்டும் மீண்டும் ராஜ் கவுண்டர் என்று கூறினார். கிட்டத்தட்ட 30 முறை ராஜ் கவுண்டர் என்ற பெயரை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தினார்.
சர்ச்சைக்கு உள்ளான ராஜ் கவுண்டர்
ராஜ் கவுண்டர் என்ற பெயரை உதயநிதி ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறியது முற்போக்கு அமைப்பினர் இடையே விமர்சனங்களை சந்தித்துள்ளது. புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில்தான் இந்த வெல்லட்டும் சமூக நீதி' மாநாடு நடத்தப்பட்டது. இதில் திமுக நட்பின் அடிப்படையில் கலந்து கொண்டது. அதில் ராஜ் கவுண்டர் என்ற பெயரை பயன்படுத்தாமல் ராஜ் என்று கூறி இருக்கலாம். ஆனால் உதயநிதி ஸ்டாலின் வார்த்தைக்கு வார்த்தை 'ராஜ் கவுண்டர் அவர்களே.. ராஜ் கவுண்டர் இவர்களே' என கூறியது சர்ச்சையானது.
உதயநிதி ஸ்டாலின் ராஜ் கவுண்டர் என்ற பெயரை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. முக்கியமாக தமிழக வெற்றிக் கழகம், அதிமுகவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.
யாரு அந்த ‘ராஜ் கவுண்டர்’?
— Arvinth Easwaran (@arvinth_e) December 3, 2025
மாநாடு மொடக்குறிச்சி தொகுதி எழுமாத்தூர்ல நடந்துருக்கு, KVG or வேட்டுவ கவுண்டர்? pic.twitter.com/IcMP9dqvli
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர், திமுக பல ஆண்டுகளாக சமூக நீதி என்று கூறுகிறது. எங்களுக்கு கொள்கை இல்லை என்கிறார்கள். ஆனால் திமுகவினர்தான் கொள்கை இல்லாமல் செயல்படுகிறார்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின் பேச்சே உதாரணம். சமூக நீதி சமூக நீதி என்று மேடைக்கு மேடை பேசும் திமுக இதை எல்லாம் கவனிக்காதா என்று விமர்சனம் செய்கின்றனர்.
இன்னொரு பக்கம் அதிமுக நிர்வாகிகள், இதையே எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தால் அவருக்கு கொள்கை இல்லை, அவர் சாதி தலைவர். கொங்கு தலைவர் என்று முத்திரை குத்தி இருப்பார்கள். ஆனால் இங்கே துணை முதல்வரே இப்படி பேசி இருக்கிறார். அவரை எல்லாம் விமர்சனம் செய்ய மாட்டார்கள். திமுகவில் கூட்டணியில் உள்ள விசிக கேள்வி கேட்காது என்று விமர்சனம் வைத்துள்ளனர்.
இதே மீட்டிங் ல எடப்பாடியார் கலந்து கொண்டிருந்து, அவர் இதே போல், பேசிய 25 நிமிடத்தில், 19 முறை ராஜ் கவுண்டர், ராஜ் கவுண்டர்ன்னு பேசியிருந்தால்,
— Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK (@Dhanaakutty1) December 2, 2025
தமிழ்நாட்டு நட்ட நடுநிலை போராளிகள் இந்நேரம் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.
அதிமுகவை சாதிக்கட்சியாக மாற்றிவிட்டார்… pic.twitter.com/e6b1ctJaJz
திமுக தரப்பு சொல்வது என்ன?
திமுக தரப்போ அந்த மாநாடு என்பதே சமூக நீதி பேசும் மாநாடு. சிலரின் பெயரில் தொடக்கத்தில் இருந்தே ஜாதி பெயர் இருக்கும். அவர்கள் பெயரை அதை தவிர்த்து பேசுவது கடினம். தமிழ்நாட்டில் பெயருக்கு பின் ஜாதி பெயர் இருக்காது. ஆனாலும் சிலர் இன்னுமும் அப்படி வைக்கிறார்கள். அவர்களின் பெயரை நாம் கூறும் போது, அது வழக்கில் அப்படி வருவது இயல்பே. அதாவது பிரபலமான சிலரின் பெயர் ஜாதி பெயருடன் இருந்து அப்படியே பிரபலம் ஆகி இருந்தால் அதை அப்படியே கூப்பிடுவது வழக்கம். ராஜ் கவுண்டர் பெயர் கொங்கு மண்டலத்தில் பிரபலம் என்பதால்.. அப்படியே அழைத்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதை பெரிதுப்படுத்த வேண்டியது இல்லை என்கின்றனர் திமுக தரப்பினர்.












Click it and Unblock the Notifications