ஈரோட்டை அள்ளும் திமுக.. 8ல் 5 தொகுதிகளை கைப்பற்றுகிறது.. அப்போது அதிமுக? வெளியான கருத்து கணிப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் கீழ் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 2026 தேர்தலில் இதில் 5 தொகுதிகளில் இந்த முறை திமுக வெற்றிபெறும் என்று அக்னி செய்தி நிறுவனம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியவற்றை துல்லியமாக கணித்த இந்த செய்தி நிறுவனம், இந்த முறை திருப்பூர் மாவட்டத்திற்கான கணிப்பை வெளியிட்டு உள்ளது.

இப்போது தேர்தல் நடந்தால் ஈரோட்டில் தேர்தல் குறித்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற கணிப்பில் பின்வரும் தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
ஈரோடு மாவட்டம் 8 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதிகளில் வெற்றி பெறும். அதிமுக கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்த சர்வேயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக இதற்காக பதிலளித்தவர்கள் 12,745 என்று சர்வேயில் கூறப்பட்டு உள்ளது.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் திமுக வெற்றி பெறும், இது திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையேயான போட்டி அதிகம் உள்ள தொகுதி ஆகும்.
ஈரோடு கணிப்பு
ஈரோடு (கிழக்கு) மற்றும் (மேற்கு) தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்
அந்தியூர் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறும்
பவானி தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
பவானிசாகர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறும்
மொடக்குறிச்சி தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறும்
பெருந்துறை தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
திருப்பூர் கணிப்பு
அதேபோல் திருப்பூர் மாவட்டத்திற்கான கணிப்பையும் இந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இப்போது தேர்தல் நடந்தால் திருப்பூரில் தேர்தல் குறித்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற கணிப்பில் பின்வரும் தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
அதன்படி,
அவினாசி (தனி) திமுக கூட்டணி வெற்றி பெறும்
திருப்பூர் (வடக்கு) அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
திருப்பூர் (தெற்கு) திமுக கூட்டணி வெற்றி பெறும்
பல்லடம் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
உடுமலைப்பேட்டை திமுக கூட்டணி வெற்றி பெறும்
மடத்துக்குளம் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
தாராபுரம் (தனி) திமுக கூட்டணி வெற்றி பெறும்
காங்கேயம் திமுக கூட்டணி வெற்றி பெறும்
கோவை பிளான்
அதேபோல் கோவை மாவட்டத்தின் கீழ் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் திமுக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் 2026 தேர்தலில் இதில் 7 தொகுதிகளில் இந்த முறை திமுக வெற்றிபெறும் என்று அக்னி செய்தி நிறுவனம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியவற்றை துல்லியமாக கணித்த இந்த செய்தி நிறுவனம், இந்த முறை கோவை மாவட்டத்திற்கான கணிப்பை வெளியிட்டு உள்ளது.
இப்போது தேர்தல் நடந்தால் கோவையில் தேர்தல் குறித்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற கணிப்பில் பின்வரும் தகவல்கள் இடம்பெற்று உள்ளன
திமுக கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள்
திமுக கூட்டணி கோயம்புத்தூர் (வடக்கு) மற்றும் கோயம்புத்தூர் (தெற்கு) தொகுதிகளில் வெற்றி பெறும்.
திமுக கூட்டணி மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் வெற்றி பெறும்.
திமுக கூட்டணி கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் வெற்றி பெறும்.
அதிமுக கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள்
அதிமுக கூட்டணி தொண்டாமுத்தூரில் வெற்றி பெறும்
அதிமுக கூட்டணி சூலூர் தொகுதியில் வெற்றி பெறும்.
அதிமுக கூட்டணி சிங்காநல்லூரில் வெற்றி பெறும்.
கோவை மாவட்டத்தின் கீழ் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் திமுக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் 2026 தேர்தலில் இதில் 7 தொகுதிகளில் இந்த முறை திமுக வெற்றிபெறும் என்று அக்னி செய்தி நிறுவனம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
கோவை திமுக பிளான்
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, மேற்கு தமிழ்நாட்டை, குறிப்பாக கோயம்புத்தூரை, திமுக தீவிரமாக குறி வைத்து வருகிறது. அதிமுக கோட்டையாகவும், பாஜக வளரும் தளமாகவும் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், சாதி வாரியான வாக்குகள், உள்ளூர் பிரச்சனைகள், தொழில்முனைவோருக்கான திட்டங்கள் அதிகம் கவனம் பெறுவது வழக்கம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் 133-ல் வென்று ஆட்சி அமைத்தபோதிலும், மேற்கு தமிழ்நாட்டின் 68 தொகுதிகளில் வெறும் 24 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. கோயம்புத்தூரில் திமுக ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை; அதிமுக 9 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
2021 முதலே களப்பணிகளை மேற்கொண்டாலும், கடந்த சில மாதங்களில் மேற்குப் பகுதியில் கணிசமான அரசியல் முதலீடுகளை திமுக செய்துள்ளது. கோவையில் தொழிலதிபர் ஜி.டி. நாயுடு பெயரில் மேம்பாலம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவக சங்கிலியின் இயக்குநர் டி. சீனிவாசன் தமிழ்நாடு அரசு உணவு ஆணையத்தில் உறுப்பினராக நியமனம் ஆகியவை நாயுடு சமூகத்தினரால் வரவேற்கப்பட்டுள்ளன.
அதேபோல, முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி (கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்) கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் கோவை தொகுதிக்கே மாற உள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ராஜ் கவுண்டர் நடத்திய புதிய திராவிடக் கழக மாநாட்டில் பங்கேற்றதும் களத்தில் பலனளிப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
கோவில்களில் இனி முறைகேடு கூடாது.. விஜய் போட்ட உத்தரவு.. களமிறங்கிய ரமேஷ்.. என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications