குலுங்கியது கோபிசெட்டிபாளையம்.. செங்கோட்டையன் சொந்த ஊரில் கெத்து காட்டிய எடப்பாடி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்கு இன்று வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெள்ளத்தில் மத்தியில் மிதந்தபடி எடப்பாடி பழனிசாமி வாகனம் வந்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தனது 6-வது கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை கட்சியில் சேர்க்க கடந்த செப்டம்பர் மாதம் போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரையும் சந்தித்து பேசினார். இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நடிகர் விஜய் தொகுதி வெற்றி கழகத்தில் சேர்ந்துள்ளார்.

த.வெ.க.வில் சேர்ந்த பிறகு கோபிசெட்டிபாளையம் சென்ற செங்கோட்டையனுக்கு விஜய் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களது மத்தியில் பேசிய செங்கோட்டையன், வருகிற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார். "எனது பதவி இழந்தேன், நாளை கோபிசெட்டி பாளையத்திற்கு வருகிறேன்" என்று அவர் பெயரை குறிப்பிடாமல் கூறினார்.
அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் வெளியேறிய நிலையில், அவரது கோட்டையாகக் கருதப்படும் கோபிசெட்டிபாளையத்தில் இன்று இரவு எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டத்தில் பேசுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டத்தில், தன்னைப் பற்றி விமர்சித்த செங்கோட்டையனுக்கு உரிய பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பல கருத்துக்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோபிசெட்டிபாளையத்திற்கு நேற்று சென்ற செங்கோட்டையனுக்கு விஜய் கட்சியினர் ஆயிரக்கணக்கில் திரண்ட வரவேற்பு அளித்தனர். அதனை முறியடிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்துக்கும் அதிக அளவில் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டுவதற்கு கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு இருந்தனர். இதற்கு ஏற்றபடி, கோபிசெட்டி பாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்து வருகை தந்தனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெள்ளத்தில் மத்தியில் மிதந்தபடி எடப்பாடி பழனிசாமி வாகனம் வந்தது. வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடியே சென்றார்.
-
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications