ஈரோட்டில் சிவராத்திரி விரதத்தை சோதித்த 'ஷீலா'..! 2 "மெகா" விருந்தாளிகளால் வாயடைத்து போன மக்கள்
ஈரோடு: கடந்த சில நாட்களாகவே மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் மிகுந்த ஆன்மீக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று விழா நிறைவடைந்ததை தொடர்ந்து சந்தைகளின் நிலவரம் குறித்த விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன... அதனை சுருக்கமாக இங்கே பார்ப்போம்...!!
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில், மகா சிவராத்திரியை முன்னிட்டு இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் இதற்கான அறிவிப்பை ஒருநாள் முன்னதாகவே வெளியிட்டிருந்தது..

சிவராத்திரி 2026
அந்த அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, நேற்று மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சி விற்பனைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
சிவராத்திரி என்பது விரதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உரிய நாள் என்பதால், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பெங்களூருவில் நேற்று இறைச்சி விற்பனை முற்றிலுமாக முடங்கியிருந்ததுடன், அசைவ உணவகங்களிலும் விற்பனை சரிவைக் கண்டது.
நம்ம தமிழகத்தை பொறுத்தவரை, சிவராத்திரி என்பதால் பல மாவட்டங்களில் இறைச்சி விற்பனை மந்தமாகவே காணப்பட்டது... வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடைகளில் காலையிலேயே கூட்ட நெரிசல் காணப்படும்..
ஈரோடு மீன் மார்க்கெட்
குறிப்பாக ராமநாதபுரம் போன்ற கடலோர பகுதிகளில் மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சியின் விலை மற்றும் வரத்து ஆகியவை இந்த விழாவினால் கணிசமான மாற்றத்தைச் சந்தித்தன. பொதுவாக விடுமுறை தினங்களில் அசைவ உணவுகளுக்கு நிலவும் பெரும் வரவேற்பு, சிவராத்திரி விரதம் காரணமாக நேற்று பெரிய அளவில் தென்படவில்லை. மக்கள் விரதத்தைக் கடைப்பிடித்ததால், வழக்கமாக களைகட்டும் இறைச்சி சந்தைகள் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன.
குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தின் நிலவரம் சற்று மாறுபட்டதாக இருந்தது. ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டிற்கு, வழக்கமான விடுமுறை தினமான நேற்று தூத்துக்குடி, கடலூர் மற்றும் ராமநாதபுரம் போன்ற பகுதிகளிலிருந்து மீன்கள் விற்பனைக்கு வந்திருந்தன.
ஆச்சரியம் தந்த ஷீலா
இருப்பினும், வழக்கமாக வரும் மீன்களின் அளவை விட நேற்று வரத்து குறைவாகவே இருந்தது. சுமார் 3.5 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்தன. சிவராத்திரி திருவிழாவால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்த நிலையில், மீன் மார்க்கெட்டில் விற்பனை மிகவும் மந்தமாகவே நடந்தது.
இந்த மந்தமான சூழலிலும், ஈரோடு மார்க்கெட்டில் சில சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக தூத்துக்குடியிலிருந்து விற்பனைக்கு வந்திருந்த இரண்டு ராட்சத ஷீலா மீன்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. தலா 15 கிலோ எடை கொண்ட இந்த மெகா மீன்கள், கிலோ ஒன்றுக்கு 800 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன.
2 விருந்தாளிகள்
சந்தைக்கு வந்திருந்த மக்கள், விற்பனை மந்தமாக இருந்தபோதிலும், இந்த மெகா மீன்களை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த ஷீலா மீன் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது...!!
ஒட்டுமொத்தமாக பார்த்தால், பெங்களூருவில் அரசு விடுத்த தடையினாலும், தமிழகத்தின் ஈரோடு மற்றும் மற்ற மாவட்டங்களில் மக்களின் ஆன்மீக விரத முறையினாலும் நேற்று அசைவ விற்பனை பெருமளவு சரிவை சந்தித்தது. சிவராத்திரி விழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் சந்தைகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும், இறைச்சி மற்றும் மீன் வரத்து அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்...!!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications