சத்தியமங்கலத்தில் அரசு பஸ் முன்பு துள்ளியோடிய 3 ஆடுகள்.. பூரித்து மகிழ்ந்த பயணிகள்.. ஈர்க்கும் ஈரோடு
ஈரோடு: சத்தியமங்கலத்தில் நெகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடந்துள்ளது.. இதனை சுற்றுவட்டார பகுதி மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றிருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து தினமும் காலை 6:40 மணிக்கு, அரசு பஸ் ஒன்று, திருப்பூர் வழியாக தேனி வரை சென்று வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக தேனி வரை செல்லும் இந்த அரசு பஸ்ஸானது, பண்ணாரி, ராஜன்நகர், பசுவபாளையம், கொத்தமங்கலம், பவானிசாகர், பனையம்பள்ளி ஆகிய கிராமங்கள் வழியாக புளியம்பட்டி சென்றடைகிறது.

பயணிகள்: பிறகு அங்கிருந்து வேலையை முடித்து இந்த பயணிகள், இதே பஸ்சில் ஏறி இரவு 10 மணி அளவில் சத்தியமங்கலத்துக்கு வருகின்றனர். இந்த வழிப்பேருந்தில் மேற்கண்ட கிராமங்களில் இருந்து சுமார் 56 பயணிகள் தினசரியாக கடந்த 15 ஆண்டுகளாகவே பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்..
இந்த பஸ்ஸின் மூலம் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். 15 வருடமாகவே இதே பஸ்ஸில் சென்றுவருவது, பயணிகளுக்கு மிகவும் சவுகரியமாக இருந்து வருகிறது.
பாதுகாப்பான பயணம்: இந்த பஸ், எப்போதுமே லேட்டாக வருவதில்லையாம்.. சரியான நேரத்திற்கு வந்துவிடுவதால், சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடிகிறதாம்.. அத்துடன், பாதுகாப்பான, மகிழ்ச்சியான பயணம் அமைவதால், இந்த பேருந்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளும், கடந்த 6 வருடங்களாகவே ஆடி மாதத்தில், கிடாய் வெட்டி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
இந்த பஸ்ஸில் செல்லும் மொத்த பயணிகளுமே, பஸ்ஸூக்கு வருடா வருடம் கிடாய் வெட்டி பூஜை செய்வார்கள். அந்த வகையில் இந்த வருடமும் பஸ்ஸுக்கு மாலை அணிவித்தனர்.. வாழைமரங்களை கட்டி, டயர்களுக்கு சந்தனமிட்டனர்.. பஸ்ஸூக்குள்ளேயே பலூன்களை கட்டி விட்டனர்.. பிறகு பேருந்து முன்பு பூஜை நடத்தி அரசு பேருந்துக்கு ஆடு வெட்டினார்கள்..
திருஷ்டி: இறுதியாக பெண்கள் பொங்கல் வைத்து, சாமியை வழிபட்டனர்... கிடாய் வெட்டி பூஜை செய்யப்பட்ட பிறகு, அங்குள்ள ஏழைகளுக்கெல்லாம், இந்த பயணிகள் விருந்து படைத்தனர். அந்த பஸ்ஸூக்கு திருஷ்டி கழிப்பதற்காகவே, இப்படி வருடா வருடம் கிடாய் வெட்டி பூஜை செய்கிறார்கள். இதனை ஏராளமான அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களும், அந்த பகுதியிலுள்ள பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கிடா வெட்டு: கடந்த வருடமும் இப்படித்தான் கிடாய் வெட்டி பூஜை செய்தாரகள்.. இந்த பஸ், எப்போதுமே லேட்டாக வருவதில்லை.. சரியான நேரத்திற்கு வந்துவிடுவதால், இவர்கள் எல்லாருமே தினமும், திருப்பூருக்கு சரியான நேரத்தில் வேலைக்கு சென்று வருகிறார்கள்..
கடந்த வரும் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் பண்ணாரி வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போதுதான், அங்கு பஸ் ஏற வந்த தொழிலாளர்கள் பஸ்ஸை நிறுத்திவிட்டு, இந்த பூஜைகளை செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications