ஈரோட்டில் விஜய் சொன்னாரே! பாம்பு.. காலிங்கராயன்.. அவர் வரலாறு பாடப்புத்தகத்தில் இடம் பெறுதாம்!
ஈரோடு: ஈரோடு காலிங்கராயன் வரலாற்றைப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயன் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விவசாயத் தந்தை எனப் போற்றப்படும் காலிங்கராயனின் பங்களிப்பைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், அவரது வாரிசுதாரர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்காக ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தின் பெருமைக்குரிய ஆளுமையான காலிங்கராயனின் திருவுருவச் சிலை மற்றும் நவீன நூலகம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
வெள்ளோட்டில் சாலை விரிவாக்கப் பணிகளின்போது அகற்றப்பட்ட காலிங்கராயனின் மார்பளவு சிலைக்குப் பதிலாக, தற்போது நீதிமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இச்சிலையின் கீழ் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட நவீன நூலகம், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுப் பாதுகாக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
"காலிங்கராயன் செய்த அசாத்தியமான பணிகளுக்கு நன்றிக் கடனாகவே இச்சிலையை அமைத்துள்ளோம். முதலமைச்சர் நேரம் ஒதுக்கித் திறந்து வைத்தது, அவரது வாரிசுதாரர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான காலிங்கராயன் வாய்க்கால் புனரமைப்பு குறித்துப் பேசிய அமைச்சர், இத்திட்டத்திற்காக ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். மேலும், வரும் மார்ச் மாதம் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்படும் 45 நாட்களில், போர்க்கால அடிப்படையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே "பேபி கால்வாய்கள்" அமைக்கப்பட்டுள்ளன. மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தாலே வாய்க்கால் பெருமளவு பாதுகாக்கப்படும் என்பதால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். இதன் அடிப்படையில், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
காலிங்கராயனின் வரலாற்றுச் சாதனைகளைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
ஜாதி, மத பேதமின்றி அனைத்துக் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் இந்த விழாவில் கலந்து கொண்டது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் பாராட்டினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முன்னோடிகளைப் போற்றுவதில் திமுக அரசு எப்போதும் உறுதியுடன் செயல்படும் என்று அமைச்சர் முத்துசாமி தனது பேட்டியில் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
காலிங்கராயன் குறித்து நடிகர் விஜய் ஈரோடு பொதுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். விஜய் பேசுகையில் ஈரோடு மக்களின் விவசாயத்துக்கு கவசமாக உள்ளது காலிங்கராயன் அணையும், கால்வாயும். இதனை கட்டும்போது காலிங்கராயன் சோர்வடைந்ததைக் கண்ட அவரது தாய், 'மகனே, தயிர் விற்ற காசும், மோர் விற்ற காசும் இன்னும் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு போய் கால்வாய் வெட்டு' என்று தைரியம் கொடுத்தார்.
அன்று காலிங்கராயனுக்கு மக்கள் மீது இருந்த அக்கறை, இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. அணை கட்டுவதற்காக காலிங்கராயன் பவானிக்கு சென்று இடம் பார்க்கும் போது ஒரு பாம்பு அங்கு அமர்ந்திருந்ததாகவும், அந்த இடத்தில்தான் அணை கட்டத் தொடங்கியதாகவும், பாம்பு சென்ற பாதையில்தான் கால்வாய் வெட்டப்பட்டதாகவும் சில வாய்மொழிக் கதைகள் சொல்லப்படுகின்றன." என்று பேசினார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications