ஈர்க்கும் ஈரோடு.. சத்தியமங்கலம் கோயிலில் அதிசயத்தை பாருங்க.. இதென்ன விநோதம்? பூரித்து நின்ற மக்கள்
ஈரோடு: விஷஜந்துக்கள் சிலைகளை உடைக்கும் திருவிழா ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த திருவிழாவின் சிறப்பம்சம் என்ன?
நம்முடைய தமிழ்நாட்டில் விநோத திருவிழாக்கள், காலம் காலமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.. குறிப்பாக, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள், உடம்பெல்லாம் சேறு பூசி திருவிழா, மீன்பிடி திருவிழா என நூற்றுக்கணக்கான விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோயில்: அந்தவகையில், ஈரோடு மாவட்டத்திலும் ஒரு விநோத திருவிழா வருடாவருடம் நடத்தப்பட்டு வருகிறது.. சத்தியமங்கலம் அருகே உள்ள அலங்காரிபாளையத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யா கோயில் உள்ளது.
இந்த எப்போதுமே சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.. சித்திரை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் விழாவில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் களிமண் உருவச்சிலைகளை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்..
ஜந்துக்கள்: அதுமட்டுமல்ல, இந்த திருவிழாவை முன்னிட்டு, இக்கோயில் வளாகத்திலேயே, பாம்பு,தேள், பூரான், பல்லி, சிலந்தி என பல்வேறு விஷ ஜந்துக்களின் மண் உருவபொம்மைகள் விற்கப்படும்.. கோயிலுக்கு செல்லும் முன்பு, 10 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பாம்பு, தேள், பூரான், பல்லி, ஓணான் விஷ ஜந்துகளின் களிமண் பொம்மைகளை பக்தர்கள் வாங்கி கொள்வார்கள்..
இந்த பொம்மைகளை, அய்யன் மற்றும் கருப்பராயன், தன்னாசியப்பன், பாம்பாட்டி தெய்வங்கள் முன்பு வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபடுவார்கள்..
பொம்மைகள்: பிறகு, அந்த களிமண் பொம்மைகளை, அங்கிருக்கும் கல்லில் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு, அதற்குபிறகுதான், மூலவர் அய்யன் சுவாமிக்கு அலங்காரம், அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகளை நடத்துவார்கள். மண் சிலைகளை உடைப்பதற்காகவே, அந்த கோயில் தெற்குப்புற சுவர் ஓரத்தில் கல் வைக்கப்பட்டிருக்கும்.
அந்தவகையில், இந்த வருஷமும், இத்திருவிழாவை சிறப்பிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். மண் சிலைகளை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்வாறு வழிபட்டால் வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் தென்படாது என்றும், மனிதர்களை விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பதும் ஐதீகமாக கருதப்படுகிறது..
மண் பானைகள்: இந்த திருவிழாவில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு, மண் பானைகளையும் அதிகம் வாங்கி சென்றார்கள்.. இந்த விழாவையொட்டி, சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications