ஈரோடு தொகுதியில் 3வது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி.. பாஜக கூட்டணி பரிதாப நிலை
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் முன்னிலை வகித்து வரும் நிலையில், இரண்டாவது இடத்தினை அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பிடித்துள்ளார். 3வது இடத்தினை நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன் பிடித்துள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணித மேதை ராமானுஜன் ஆகியோர் பிறந்த ஈரோடு மாநகரம் கொங்கு மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான நகரம் ஆகும். ஈரோடு நகரம் மஞ்சள் மற்றும் ஜவுளிகளுக்கு உலக புகழ்பெற்ற நகரமாகும். காவிரி ஆற்றங்கரை நகரமான ஈரோடு அதிமுகவின் கோட்டை ஆகும். 2011 மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக இங்கு பெற்ற வெற்றி அசாத்தியமானது. மொத்தமாக கைப்பற்றி அசத்தியது.

இந்த தொகுதி இதற்கு முன் திருச்செங்கோடு தொகுதியாக இருந்தது. இதில் 1952 தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் எஸ்.கே.பேபி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இரு முறை காங்கிரஸ் வென்றுள்ளது.
ஆனால் திமுகவின் எழுச்சிக்கு பின் 1967 முதல் 1998 வரை அதிமுக, திமுக கட்சிகளே இங்கு வெற்றிபெற்றுள்ளன. 1998 லோக்சபா தேர்தலில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றார்.
திருச்செங்கோடு தொகுதி 2009க்கு பின்னர் ஈரோடு லோக்சபா தொகுதியாக உருவாக்கப்பட்டது . தொகுதிகளும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஈரோடு மேற்கு ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம், குமாரபாளையம் ஆகிய ஆறு தொகுதிகள் உள்ளன. ஈரோடு தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,28,241 ஆகும் .
தொகுதி மறு சீரமைப்புக்கு பின் கடந்த 2009 லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைத் தோற்கடித்து மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றிபெற்றார். ஆனால் 2014ம் ஆண்டில் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் செல்வகுமார் சின்னையன் வெற்றி பெற்றார். ஆனால் 2019 தேர்தலில் மீண்டும் மதிமுகவின் கணேச மூர்த்தி வெற்றி பெற்றார்.

2024 தேர்தலை பொறுத்தவரை அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிட்டிருக்கிறார். திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிட்டுள்ளார். பாஜக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயகுமார் போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகன் போட்டியிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட பிரகாஷ் இடையே ஆரம்பத்தில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் தற்போதைய நிலையில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 24822 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 17177 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன் 4922 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கிய தமாகா வேட்பாளர் விஜயகுமார் 3317 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications