மச்சினிச்சி கசமுசா.. வாடகை வீட்டுக்காரருடன் ஒரே அக்கப்போரு.. "மாமனுக்கு" வைத்த குறி.. பாவம் பழனிசாமி
ஈரோடு: தன் காரியத்தை சாதித்து கொள்வதற்காக, உடன்பிறந்த அக்கா வீட்டுக்காரரை "குறி" வைத்தார் மச்சினிச்சி.. இப்போ என்னாச்சு தெரியுமா?
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ளது புங்கம்பாடி பாரவலசு என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பழனிசாமி.. 72 வயதாகிறது.. இவரது மனைவிக்கு குழந்தை பிறக்காததால், கடந்த 25 ஆண்டுக்கு முன்பு மரகதம் என்பவரை பழனிச்சாமி 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.

பழனிசாமி: கடந்த 20ம் தேதி பழனிசாமியை யாரோ கொன்றுவிட்டார்கள்.. உடம்பெல்லாம் ரத்த காயங்கள் கொடூரமாக வெட்டுப்பட்டு காணப்பட்டன.. அத்துடன் பழனிசாமியின் சடலத்தையும் எரித்துள்ளனர். இதைப்பார்த்து பதறிப்போன மரகதம் போலீசுக்கு தகவல் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.
அரிவாளால் வெட்டி, அதற்கு பிறகு உடலுக்கு தீவைத்தது தெரியவந்தது.. பிறகு, பழனிசாமி மனைவியின் சகோதரியான ஈரோடு முருங்ககாட்டு வலசை சேர்ந்த மாசிலாமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் மச்சினிச்சி மாசிலாமணி வசமாக சிக்கினார்.
மாசிலாமணி : மாசிலாமணிக்கு 35 வயதாகிறது.. இவர் வீட்டிற்கு அருகே, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தமிழன் என்பவர் வாடகைக்கு வந்திருக்கிறார்.. 36 வயதாகிறது.. கல்யாணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள்.. மாசிலாமணியும், தமிழனும், ஒன்றாக நூல் மில்லில் வேலை பார்த்துவருகிறார்கள்.. ஒரே இடத்தில் வேலை பார்ப்பதாலும், பக்கத்து வீட்டில் இவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
தமிழனுக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது.. எனவே, மாசிலாமணி தன்னுடைய மகளுக்காக வைத்திருந்த 10 பவுன் நகையையும், பணத்தையும், தமிழனுக்கு தந்து உதவியிருக்கிறார்.. இதற்கு நடுவில், மாசிலாமணிக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்வதற்காக, கள்ளக்காதலனிடம் கடனாக கொடுத்த நகை, பணத்தை கேட்டுள்ளார். ஆனால், உடனடியாக பணம், நகையை தர முடியாது என்று சொல்லிவிட்டாராம் தமிழன்.
மஞ்சள் நீராட்டு விழா: எனவே, பணமில்லாமல் பூப்புனித விழாவை நடத்த முடியாமல் அவதிப்பட்டார் மாசிலாமணி.. பூப்புனித விழாவை, இன்னொரு நாளுக்கு தள்ளிவைத்து வைக்கவும் முடியவில்லை.. குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவினர்கள், யாராவது இறந்துவிட்டால் எப்படியும் சுபகாரியத்தை நடத்த முடியாது என்பதால், யாரையாவது கொன்றுவிடலாம் என்று முடிவெடுத்தார் மாசிலாமணி.
இந்த பூப்புனித விழாவை தள்ளிப்போடுவதற்காகவும், நகை மீட்டி தருவதற்கு கள்ளக்காதலனுக்கு டைம் தர வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய அக்கா வீட்டுக்காரர் பழனிசாமியை கொலை செய்ய முடிவெடுத்தார் மாசிலாமணி.. தன்னுடைய 17 வயது மகனையும், கள்ளக்காதலன் தமிழனையும், இந்த கொலையில் ஈடுபடுத்தி கொண்டார்.
கள்ள ஜோடி: கடந்த 19ம் தேதி இரவு, வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பழனிச்சாமியை அரிவாளாலேயே வெட்டி சாய்த்துள்ளார்கள் இந்த 3 பேரும்.. பிறகு, உடலை அங்கேயே கட்டிலோடு சேர்த்து தீயிட்டும் பொசுக்கியிருக்கிறார்கள்.. உடல் கருகியதும், எதுவுமே தெரியாதது போல, அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்களாம். இவ்வளவும் விசாரணையில் மாசிலாமணி ஒப்புக் கொண்டார்.. இதையடுத்து, மாசிலாமணியின் 17 வயது மகன் உட்பட கள்ளக்காதல் ஜோடி ஜெயிலுக்கு போயிருக்கிறது.
கள்ளக்காதலனிடம் கொடுத்த நகைகளை மறைப்பதற்காக, மாமாவை கொன்ற இந்த பாசக்கார மச்சினிச்சியை கண்டு ஈரோடே அதிர்ந்து போயுள்ளது.












Click it and Unblock the Notifications