ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகைக்காக.. காரில் இருந்த கணவரை உயிருடன் எரித்த மனைவி! உறவினருடன் கைது

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கடன் வாங்கி சிக்கலில் சிக்கிய ரங்கராஜன், 3 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறார். கணவர் வாங்கிய கடனால் விரக்தியில் இருந்த மனைவி அவரை கொன்றுவிட்டால் 3 கோடி ரூபாய் கிடைக்கும் என்று நப்பாசையில் காரில் உயிருடன் எரித்துக் கொன்றார்.

அதை உறவினர்களுடன் இணைந்து விபத்து போல் செட்டப்பும் செய்திருக்கிறார். ஆனால் கண்டுபிடித்த திருப்பூர் பெருமாநல்லூர் போலீசார், மனைவி மற்றும் அவரது உறவினரை கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன் 62. இவர் விசைத்தறி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 1 கோடி ரூபாய் கடன் இருந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காலில் காயமடைந்துள்ளார்.

பெருந்துறை

பெருந்துறை

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த ரங்கராஜ் (62). இவருக்கு கடந்த மாதம் விபத்து ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவரை வியாழக்கிழமை இரவு கோவை மருத்துவமனையில் இருந்து, அவரது மனைவி ஜோதிமணி, உறவினரான ராஜா(41) ஆகியோர் பெருந்துறைக்கு காரில் அழைத்து வந்துள்ளனர்.

ஆம்னி வேன்

ஆம்னி வேன்

இதற்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரது மனைவி ஜோதிமணி(55), உறவினர் ராஜா(41) இருவரும் சேர்ந்து நேற்று இவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ஆம்னி வேனில் அழைத்து வந்தனர். இவர்கள் பெருமாநல்லூர் அருகே பொரசுபாளையம் பிரிவு பகுதியில் வந்த போது காரில் இருந்து புகை வந்ததாக கூறி இறங்கி உள்ளனர்

உயிரிழந்தார்

உயிரிழந்தார்

ரங்கராஜனுக்கு காலில் அடிப்பட்டு இருந்தால் அவரை மீட்பதற்குள் கார் முழுமையாக தீ பிடித்து எரிந்து விட்டதாகவும் இதில் ரங்கராஜன் உடல் கருகி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் விசாரணையில் ஜோதிமணியும், ராஜாவும் முன்னுக்குப்பின் முரணாக வேறுவேறு மாதிரி பேசியுள்ளனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை


இதனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது. ரங்கராஜனுக்கு 1 கோடி ரூபாய் கடன் இருந்துள்ளது. மேலும் ரங்கராஜன் 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு எடுத்திருந்ததும் அதில் நாமினியாக ஜோதிமணியை நியமித்திருந்ததும் தெரியவந்தது.

நாடகம்

நாடகம்

கடன் தொல்லை இவ்வளவு உள்ள நிலையில் தன்னை கொன்று விடுங்கள் என ரங்கராஜன் கூறியதாகவும் இதனால் கடன் பிரச்சனையில் இருந்து மீளவும் மற்றும் அவர் 3 கோடி ரூபாய்க்கு செய்திருந்த விபத்து காப்பீடு தொகையை பெறவும் காருடன் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக் கொண்டனர். இதை மறைப்பதற்காக கார் தானாகவே தீப்பிடித்து எரிந்ததாக நாடகமாடியதையும் ஒப்புக்கொண்டனர்.

மனைவி கைது

மனைவி கைது

இதனையடுத்து ரங்கராஜின் மகன் நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் ஜோதிமணியையும் அவருக்கு உதவியாக செயல்பட்ட உறவினர் ராஜா என்பவரையும் பெருமாநல்லூர் போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடன் தொல்லை மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிக்காக பெட்ரோல் ஊற்றி காருடன் கணவரை மனைவி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
thirupur perumanallur police arrest rangarajan wife who burnt her husband alive in the car for an insurance amount of Rs 3 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X