எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்
ஈரோடு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சியை கொடுத்து வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் அண்மைக்காலமாக ஒதுங்கி இருந்தார் இளங்கோவன். தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவதூறாக பேசிய போதும் பெரியாரின் பேரனான ஈவிகேஎஸ் இளங்கோவன் அமைதி காத்து வந்தார்.

இந்நிலையில் ஈரோட்டில் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டனப் போராட்டம் நடத்தினர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சியை கொடுப்பது போல் தோன்றுகிறது. ஆனால் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாமல் தமிழக மக்களுக்கு அவர் துரோகம் செய்து வருகிறார்.
சிஏஏ போன்ற விவகாரங்களில் மத்திய பாஜக அரசை அதிமுக ஆதரிக்கிறது. பாஜகவின் பி டீம் ஆக அதிமுக செயல்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு கொஞ்சம் நல்ல பெயர் இருக்கிறது. அந்த பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்தி விடுவார் என்றார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி வரவேற்றார். தற்போது தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் தமிழக அரசை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications