பெருந்துறையில் காற்றில் பறக்கும் கட்சி மானம்..திமுக ஜெயித்தது எப்படி.. பெரும் குமுறலில் அதிமுக!
பெருந்துறை அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி உள்ளாட்சி மன்ற தேர்தலில் திருப்திகரமான வெற்றி கிடைக்காமல் போனதால் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.
பெருந்துறை தொகுதி என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்ற அசைக்க முடியாத தொகுதி ஆகும்.. அதிமுக ஆட்சி கால் பதிக்க காரணமாக இருந்தது பெருந்துறை!
கடந்த 2016-ல் தேர்தலின்போது, ஜெயலலிதா, மின் துறை அமைச்சர் தங்கமணியின் தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளுக்கும் மையப்பகுதியாக பெருந்துறையைதான் தேர்ந்தெடுத்திருந்தார்.. இங்கு அசுர வேகத்தில் தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்தி காட்டினார்.. அப்போதைய அதிமுக தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு, வெற்றி வாகை சூட அடித்தளமிட்ட தொகுதி பெருந்துறை!

ஜெயலலிதா
பொதுவாக எல்லா இடங்களிலும் ஹெலிகாப்டர் மூலமாகவே பிரச்சாரத்துக்கு சென்று வரும் ஜெயலலிதா, அன்று பெருந்துறையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கிளம்பும்போது... இருபுறமும் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களை பார்த்து, பரவசமடைந்தது.. காரிலேயே கோவைக்கு சென்றார்.. இப்படி ஒரு மெகா கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்.

கொங்கு மண்டலம்
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும், நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட 40 தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்று தந்ததும் இதே பெருந்துறை தொகுதிதான். ஆனால், இதை மாவட்ட அமைச்சர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

திமுக வெற்றி
அதனால்தான் உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் அதிமுகவை ஜெயித்து விடக்கூடாது என சில சுயேச்சைகளுக்கும் ஆதரவு தந்துள்ளனராம்.. பெருமளவில் இதில் பணம் கைமாறியதாகவும், இதனால்தான் சுயேச்சைகளும், திமுகவை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றுள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.. அதாவது எப்படியும் திரும்பவும் தோப்பு வெங்கடாச்சலம் செல்வாக்கு பெற்றுவிடுவார் என்பதாலேயே இந்த உள்ளடி வேலை நடந்ததாக சொல்லப்படுகிறது.

வருத்தம்
ஏனென்றால், இவர் முன்னாள் அமைச்சர் என்றாலும், அதே செல்வாக்கு தற்போதும் தொகுதிக்குள் உள்ளதாம்.. தன் தொகுதி மக்களிடமும் நெருங்கி பழகி வருவதாலும், தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாலும் இதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள். அதனால்தான், எப்படியும் சேர்மன் பதவியை அதிமுக கைப்பற்ற கூடாது என அமைச்சரே வரிந்து கட்டி கொண்டு வேலை பார்த்து வருவதாகவும், கட்சியின் கட்டுப்பாடு பெருந்துறையில் காற்றில் பறப்பதாகவும் தொகுதி அதிமுகவினர் வருத்தப்படுகிறார்களாம்.. முதலமைச்சரிடத்தில் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு கெட்ட பெயரை உருவாகக் வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விளக்கம்
இந்த குற்றச்சாட்டு, புகார் குறித்து தோப்பு வெங்கடாச்சலத்திடம் " ஒன் இந்தியா தமிழ்" சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.. அப்போது அவர், "மறைந்த முதல்வர் அம்மா இருந்தபோதும், முதல்வர் எடப்பாடியார் இருந்தபோதும், பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறேன்.. யார் எந்த துரோகத்தை செய்தாலும் சரி, தொகுதி மக்களும், நான் வணங்குகிற தெய்வமும் அதை பார்த்து கொள்வார்கள்" என்றார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications