மெய்யப்பன் தாலி கட்டி கொஞ்ச நேரம் கூட ஆகலை... அதுக்குள்ள பெண்ணை கடத்திய கும்பல்.. ஈரோட்டில் ஷாக்

மனைவியை அவரது குடும்பத்தினர் கடத்திவிட்டதாக கணவன் புகார் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அப்பதான் காதலிக்கு தாலி கட்டினார் மெய்யப்பன்.. அதுக்குள்ளே கல்யாண பொண்ணை கடத்திவிட்டார்கள்.. இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மெய்யப்பன்... இவர் ஜீவிதா என்ற பெண்ணை காதலித்தார்.. 3 வருட காதல் இது... சரளை சண்முகபுரம் பகுதியை சேர்ந்த ஜீவிதா, மெய்யப்பனுடன் காலேஜில் ஒன்றாக படித்தவர்.

groom files complaint to rescue abducted wife near erode

இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததுமே, ஜீவிதாவின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவ்வளவு நாள் பெற்றோரின் சம்மதத்துக்கு காத்து கிடந்த காதலர்கள், இனியும் தங்களுக்கு முழு மனசுடன் கல்யாணம் செய்து வைக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தனர்.

அதனால் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோயிலில் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.. அதன்படி ஜீவிதாவுக்கு கோயிலில் வைத்து தாலி கட்டினார் மெய்யப்பன். விஷயம் ஜீவிதாவின் வீட்டுக்கு பறந்தது.

மொத்தமாக கிளம்பி கோயிலுக்கு வந்துவிட்டார்கள்.. மாலையும் கழுத்துமாக நின்று கொண்டிருந்த 2 பேரையும் சரமாரியாக தாக்கினார்கள்.. பிறகு தாலி கட்டிய நிலையில் இருந்த ஜீவிதாவை அப்படியே கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மெய்யப்பன் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் தந்துள்ளார்.

கடத்தி செல்லப்பட்ட தனது காதல் மனைவியை மீட்டுத் தருமாறும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். "இவ்வளவு நாள் சம்மதத்துக்காத்தான் காத்துக்கிட்டிருந்தோம்.. அது கிடைக்காமல்தான் கோயிலில் வந்து தாலி கட்டினேன்.. ஆனா இப்போ இப்படி ஆயிடுச்சே" என்று புலம்புகிறார் மெய்யப்பன். இது சம்பந்தமான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+