சத்துணவு ஆயாவுக்கு உதவியாளர் வேலை செய்த ரேவதி.. பள்ளி விடுமுறை நாட்களில் கள்ளக்காதலனுடன் மீட்டிங்!
ஈரோடு : ஈரோடு அருகே கள்ளத்தொடர்பு கொண்டிருந்த மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஜம்பை பகுதியில் வசித்து வந்தவர் கருப்பன். சரக்கு ஆட்டோவில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் சித்தோடு கொங்கம்பாளையம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ரேவதியை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யஸ்வந்த், ரோஹித் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கொங்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு ஆயாவுக்கு உதவியாளராக ரேவதி பணியாற்றி வந்தார்.

வேலை நேரத்தில்
இவர் வேலை நேரத்திலும் யாருடனோ அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டே இருந்தாராம். இந்த விஷயம் அவரது கணவருக்கு தெரிந்தபிறகும் தொடர்ந்திருக்கிறது. கருப்பன் வீட்டிலிருந்தாலும் ரேவதியின் செல்போனுக்கு அவ்வப்போது மிஸ்டு கால் வருமாம். யார் என கருப்பன் கேட்டால் பள்ளியிலிருந்து ஆயாதான் போன் செய்கிறார் என சமாளிப்பாராம்.

விடுமுறை நாட்கள்
விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு சென்று வந்த ரேவதி, கருப்பனிடம் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டு நீண்ட நேரம் கழித்துதான் வருவாராம். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி இரவு மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு நடந்ததாம்.

ரேவதியின் கழுத்தை நெரித்த கருப்பன்
இந்த நிலையில் ரேவதியின் கழுத்தை நெரித்த கருப்பன் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து சித்தோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கருப்பனை தேடி வந்தனர். இந்த நிலையில் கருப்பன் தாமாக வந்து போலீஸிடம் சரணடைந்தார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக் தகவல்களை தெரிவித்தார்.

குடும்பத் தகராறு
கடந்த 16 ஆம் தேதி இவர்களிடையே நடந்த சண்டையின் போது தனக்கும் இன்னொருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக ரேவதி தெரிவித்தார். இதனால் கருப்பன் அவரது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவருடைய அண்ணனுக்கும் ரேவதியின் நடத்தை குறித்தும் அவரை கொலை செய்ததும் குறித்தும் தெரிவித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications