அண்ணாமலை மட்டுமல்ல.. எந்த மலையை பற்றியும் கவலையில்லை.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு!
அண்ணாமலை பற்றி கவலையில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு: அண்ணாமலையை மட்டுமல்ல, தனக்கு எந்த மலையை பற்றியும் கவலை இல்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் மக்கள் முன் நிற்பதாக கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், புகழ் என்ற செல்வத்தை சம்பாதிக்க வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தின் அனல் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வரும் சூழலில், மொத்தமாக 77 பேர் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணி தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஏராளமானோர் தெரு தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரம்
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு ஈரோடு கிழக்கு 34வது வார்டு உட்பட்ட என்ஜிஜிஓ காலனியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடைசி கட்டம்
இந்த பிரச்சாரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், வாழ்க்கையின் பல கட்டங்களை கடந்து வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இங்கு வந்து நிற்கிறேன். இந்த மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்து நான் இந்த திட்டத்தை செய்தேன் என்று தாய்மார்களும் மக்களும் சொல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் நான் மக்கள் பணி செய்ய வாய்ப்பு தர வேண்டும். நீங்கள் கை காட்டும் போது கை ஓங்கும், பெண்கள் புன்முறுவலோடு மகிழ்ச்சியோடு இருப்பதை பார்த்து மனநிறைவாக உள்ளது.

கவலையில்லை
என்னுடைய தாத்தா பெரியார் மீது பாசம் வைத்துள்ளீர்கள். வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் போடும் திட்டம் முதலில் ஈரோட்டில் தான் போடப்பட்டது. தந்தைக்கு மகன் என்று சொல்லும் பெயரை மகனின் தந்தை இவர் என்ற பெயரை திருமகன் ஈவெரா வாங்கி கொடுத்து சென்றுள்ளார். சிலர் அண்ணாமலையை பற்றி சொல்கிறார்கள் எனக்கு எந்த மலையை பற்றியும் கவலை இல்லை.

ஈரோட்டிலேயே இருப்பேன்
சிலர் வெற்றி பெற்றுவிட்டால் சென்னைக்கு சென்று விடுவேன் என்று கூறுகின்றனர். சென்னைக்கு சென்றால்தான் காரியங்களை செய்ய முடியும் திட்டங்களை நிறைவேற்ற முடியும், முதலமைச்சரை சந்திக்க முடியும், நான் இங்கே தான் இருப்பேன், இங்கே தான் மடிவேன். பேசுவதற்கேன்றே சிலர் இருக்கின்றனர், அவர்கள் காரியங்களை செய்யமாட்டார்கள். எனக்கு தேவைகள் கிடையாது, எங்களுக்கு பூர்விக சொத்து உள்ளது.

புகழ் சம்பாதிக்க வேண்டும்
அந்த சொத்தே எனக்கு போதும். புகழ் என்ற செல்வத்தை தான் நான் சம்பாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கும் போது மக்களுக்கு பணி செய்ய ஆவலுடன் இருக்கிறேன். ராகுல்காந்தி கட்டளையின் முன்பு நான் நிற்கிறேன், அதனால் எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்?












Click it and Unblock the Notifications