'வாடகை கட்ட கூட காசு இல்லை'.. உங்களுக்கு நண்பர்கள் இல்லையா? அதற்கு சீமான் ரியாக்சன் தான் வேறலெவல்
ஈரோடு: யாருடைய தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று செய்தியாளரிடம் கேள்வி எழுப்பிய சீமான், என்னிடம் வாடகை கட்டவே பணம் இல்லை என்று கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர், உங்களுக்கு நண்பர்கள் யாரும் இல்லையா சார் என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே சீமான் கொடுத்த ரியாக்சன் தான் இன்று பேசுபொருளாகி உள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று கூறும் போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் என்பது அனைத்து துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. இந்திய அளவிலான தனிநபரின் சராசரி ஆண்டு வருமானத்தை விட தமிழ்நாட்டில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2023-ல் நாட்டின் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.98,374ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1,66,727ஆக உள்ளது என்று தங்கம் தென்னரசு கூறினார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வருமானம் உயர்ந்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர் ஒருவர் சீமானிடம் இன்று ஈரோட்டில் கேட்டார்.
அதற்கு பதில் அளித்து சீமான் பேசுகையில், யாருடைய தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது? என்னிடம் வாடகை கட்டவே பணம் இல்லை.. சத்தியமாக சொல்கிறேன்.. வாடகை கட்ட கூட என்னிடம் காசு இல்லை.. எங்கே தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது என்றார்.
அப்போது செய்தியாளர் உங்களுக்கு நண்பர்கள் யாரும் இல்லையா என்று கேட்டார். அதற்கு சட்டென சீமான் புஹாஹா என்று தனது டிரேட் மார்க் சிரிப்பினை பதிலாக கொடுத்தார். அத்துடன் என்னத்தையாவது சொல்றது தான்.. சொல்லி வைக்கிறதுதான் என்று பேசினார்.
இதனிடையே ஈரோட்டில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய சீமான், சனாதனக் கொடுமைக்கு எதிராகத்தான் சுத்த சன்மார்க்க அமைப்பைத் தொடங்கினார் வள்ளலார். அவரை சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்று ஆளுநர் செல்வது நல்ல மனநிலையில் இருப்பவர் பேசும் பேச்சா? அவர் ராஜ்பவனில் இருக்க வேண்டியவர் அல்ல. மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர் என்று கூறினார்.
நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், இதுவரை கேள்விகளை கேட்டீர்கள்.. இப்போது கேவலத்தை கேட்குறீங்க. வேறு ஏதாவது கேளுங்க என்றார். மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் இருக்கிறதா என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு சீமான், இருக்கலாம் என்றார். மேலும் புகாரா இருந்தா காவல்துறை எடுப்பாங்க. இல்லைன்னா எப்படி நடவடிக்கை எடுப்பாங்க? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?










Click it and Unblock the Notifications