மருமகளே ஊட்டிவிடும்மா.. ஊட்டுவிடுங்க அத்தை.. இதெல்லாம் நம்புறமாதியா இருக்கு.. நம்புனாத்தே சோறு!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: மகளிர் தினத்தை முன்னிட்டு மாமியாருக்கு மருமகள் ஊட்டிவிட்டால் ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடும் பில் முற்றிலும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    மகளிர் தினத்தை முன்னிட்டு மாமியாருக்கு மருமகள் ஊட்டிவிட்டால் சாப்பாடு ஃப்ரீ.. கலக்கும் ஈரோடு ஹோட்டல் - வீடியோ

    மாமியார் மருமகள் என்றாலே சண்டை போடுவார்கள், அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது. எலியும் பூனை போல் நடந்து கொள்வார்கள். இதுதான் காலம் காலமாக உள்ள வழக்கம் என நம்பும் மக்கள் நம்மூரில் மிக அதிகம்.

    இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. சண்டைகள் அதிகமாக நடக்கும். எவ்வளவு பணம் இருந்தாலும் மாமியார் மருமகள் சண்டை மட்டும் வீட்டில் இல்லாமல் இருக்காது. ஈகோவே இதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது.

    மருமகள் கொடுமை

    மருமகள் கொடுமை

    சில இடங்களில் விதிவிலக்காக மாமியார் மருமகள் ஒற்றுமையாக இருப்பார்கள். அப்படிப்பட்ட குடும்பங்களை பார்ப்பது இன்றைக்கு அபூர்வமாகி வருகிறது. ஏனெனில் திருமணம் ஆன உடனேயே தனிக்குடித்தனம் சென்றுவிடுகிறார்கள். ஒரு வீட்டில் மாமியார் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் மாமியார் கொடுமை என்றும், மருமகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் மருமகள் கொடுமை என்று வகைப்படுத்தப்படுகிறது.

    உணவு பில் இல்லை

    உணவு பில் இல்லை

    இந்நிலையில் மகளில் தினத்தை முன்னிட்டு மாமியாருக்கு மருமகள் ஊட்டிவிட்டால் ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடும் பில் முற்றிலும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்டு ஓட்டலுக்கு நேற்று வந்த ரயில்வே பெண் ஊழியர் மற்றும் அவரது மருமகள் ஆகியோர் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டி அன்பை பரிமாறிக் கொண்டனர்.

    மருமகளுக்கு ஊட்டிவிடணும்

    மருமகளுக்கு ஊட்டிவிடணும்

    இது குறித்து ஓட்டல் உரிமையாளர் பூபதி கூறியதாவது: மகளிர் தினம் கொண்டாட்டம் ஆண்டுதோறும் எங்களது ஓட்டலில் நடைபெறும். வழக்கமாக மாமியார் மருமகள் என்றாலே சண்டை சச்சரவுகள் அதிகம் என்பது தெரிந்த கதைதான். இந்தாண்டு மகளிர் தினத்தையொட்டி மாமியார் மருமகள் இருவரும் மாறி மாறி உணவு ஊட்டிவிட்டால் அவர்கள் சாப்பிடும் உணவுக்கான பில் முற்றிலும் இலவசம் என்று அறிவித்திருந்தோம். '

    14ம்தேதி வரை இருக்கிறது

    14ம்தேதி வரை இருக்கிறது

    கடந்த 6ம் தேதி முதல் இந்த ஆபர் நடைபெற்று வருகிறது. வருகிற 14ம் தேதி வரை இதில் மாமியார் மருமகள் கலந்து கொள்ளலாம். மிச்சம் வைக்காமல் முழு உணவையும் ஊட்டிவிட வேண்டும். மாமியார் மருமகள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வதற்காக மட்டுமே இந்த ஆபர் வழங்கி உள்ளோம்" இவ்வாறு கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+