Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள முக்கிய விஷயம், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தேர்தல் நிலைப்பாடு தான்.. இப்போது அவர் போட்டியிட போகிறாரா இல்லையா? அப்படியே போட்டியிட்டால் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்? என்ற குழப்பங்களும் கொங்குவில் உலா வருகின்றன..

ஆரம்பத்தில் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பிடிவாதமாக இருந்த அண்ணாமலை, தற்போது டெல்லி தலைமையின் நேரடித் தலையீட்டால் மீண்டும் களமிறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது..

Annamalai Erode election

குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதியை மையமாக வைத்து நகரும் இந்த அரசியல் காய்நகர்த்தல்கள், தமிழகத் தேர்தல் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஈரோடு - கொங்கு மண்டலம்

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையில், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி அண்ணாமலையை அதிருப்தி அடையச் செய்தது.. கொங்கு மண்டலத்தில் பாஜக செல்வாக்குள்ள சிங்காநல்லூர், அரவக்குறிச்சி போன்ற தொகுதிகளுக்குப் பதிலாக, சவாலான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது.

இதனால், தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துவிட்டு மாநிலம் தழுவிய பிரசாரத்தில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்தார்.. ஆனாலும், பாஜகவின் தேசியத் தலைமை அண்ணாமலையை ஒரு வாக்கு காந்தமாக கருதுகிறதாம்.

மொடக்குறிச்சி தொகுதி

குறிப்பாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நேரடியாகத் தலையிட்டு நடத்திய ஆலோசனைகளுக்கு பிறகு, மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன..

இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வாக்காளர்களிடையே அவருக்கு இருக்கும் நன்மதிப்பு, கடுமையான தொகுதிகளையும் வெற்றியை நோக்கித் திருப்பும் என மேலிடம் நம்புகிறது..

இந்த திடீர் திருப்பம் அண்ணாமலைக்கு அரசியல் ரீதியாகப் பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. இதில் சில சாதகமான மற்றும் சவாலான அம்சங்களும் இருப்பதை நாம் மறுக்க முடியாது.

காரணம், மொடக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை, அண்ணாமலை களம் காணும்போது அது அந்த மண்டலத்தையே உற்சாகப்படுத்தும்.. கடினமான ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்றால், அது அவரது அரசியல் முதிர்ச்சியையும், களப் போராட்டத்தையும் நிரூபிக்கும் ஒரு சான்றாக அமையும்..

அண்ணாமலைக்கு பிளஸ் பாயிண்ட்ஸ்

அதுமட்டுமல்ல, டெல்லி தலைமையின் முழுமையான ஆதரவு அவருக்குக் கிடைப்பதால், தேர்தல் நிதி மற்றும் பிரசார யுக்திகளில் அவர் முன்னிலை பெறுவார்.. அதே சமயம் ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே.. ஒருவேளை முடிவு சாதகமாக அமையாவிட்டால், அது அவரது எதிர்கால அரசியல் பிம்பத்தை பாதிக்கக்கூடும் என்கிறார்கள் கள விமர்சகர்கள்.

அண்ணாமலையின் இந்த மறுபிரவேசம் வெறும் ஒரு வேட்பாளர் தேர்வு மட்டுமல்ல, அது பாஜகவின் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.. அதிலும், மொடக்குறிச்சி போன்ற முக்கியமான தொகுதியில் அவர் போட்டியிடுவது, தமிழகத்தின் மற்ற தொகுதிகளிலும் பாஜகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்த கண்டிப்பாக உதவும்.

பொன்னான வாய்ப்பு

ஒரு கிங் மேக்கராக மட்டும் இல்லாமல், களத்தில் நிற்கும் ஒரு போராளியாக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாகவும் அமையும்..

அந்த வகையில், அண்ணாமலை மீண்டும் களமிறங்குவது கட்சித் தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை பாய்ச்சி இருப்பதை மறுக்க முடியாது.. இதன் மூலம் தேர்தல் களம் தற்போது கூடுதல் பரபரப்பை எட்டியுள்ளது என்றாலும், அவர் எங்கு போட்யிட போகிறார் என்ற உறுதியான அறிவிப்புக்காக மொத்த மொடக்குறிச்சியும் வெயிட்டிங்....!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+