ஆக்ரோஷமாக பாஜகவை திட்டிய சினேகன்.. பிரசார வாகனத்தில் நின்று மனைவி கன்னிகா செய்ததை பாருங்க! அடடா
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன் தீவிர பிரசாரம் செய்த நிலையில் பக்கத்தில் இருந்த அவரது மனைவி செய்த செயல் விவாதத்தை கிளப்பி உள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதி வைகோவின் மதிமுகவுக்கு வழங்கப்பட்டது. இந்த தொகுதியில் கணேசமூர்த்தி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படாத நிலையில் கணேசமூர்த்தி எம்பி தற்கொலை செய்தார்.

தற்போது ஈரோடு லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் கே இ பிரகாஷ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமார், பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகமும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நேற்று ஈரோடு திமுக வேட்பாளர் கே இ பிரகாசை ஆதரித்து பிரசாரம் செய்தனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.
தேர்தலுக்கு பணமில்லையா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
அந்த வகையில் திரைப்பட பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவருமான சினேகன் திமுகவுக்கு ஓட்டு கேட்டார். அவருடன் திறந்த வாகனத்தில் மனைவி கன்னிகா உடனிருந்தார். இந்த பிரசாரத்தில் சினேகன் பேசும்போது, ‛‛மோடி ரூ.15 லட்சம் போடுவதாக கூறினாரே. அதனை வங்கி கணக்கில் செலுத்தினாரா? சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது. அண்ணாமலையால் ஒன்றும் செய்ய முடியாது அவரை நாங்கள் பார்த்து கொள்வோம்.
ஏழையின் பேச்சு எவனுக்கு தான் கேட்டது. இந்த முறை அவர்களை வெளியேற்றிவிட்டால் போதும். எல்லாம் சரியாகிவிடும். அதற்கு தான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக பணக்காரன் பணக்காரனாக இருக்கிறான். ஏழை ஏழையாகவே இருக்கிறான். உலகிலேயே பணக்காரனுக்கு உதவும் ஒரே அரசு பாஜக அரசு தான்’’ என ஆக்ரோஷமாக பேசி வந்தார்.
ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தது தேர்தல் விதிமீறலில் வராது.. காரணம் கூறிய கோவை கலெக்டர்
ஆனால் சினேகன் அருகே நின்ற அவரது மனைவி கன்னிகாவிடம் அங்கிருந்த தொண்டர்கள் ‛செல்பி’ கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து கன்னிகா தொண்டர்களின் செல்போனை வாங்கி ‛செல்பி’ எடுக்க தொடங்கினார். சினேகன் பாஜகவை விமர்சித்து வந்த நிலையில் கன்னிகா பிரசார வாகனத்தில் நின்றபடி தொண்டர்களுடன் சேர்ந்து தொடர்ந்து ‛செல்பி’ எடுத்த வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
நிருபர்களை சந்திக்க பயப்படுபவரிடம் வீரத்தை பற்றி என்ன பேச? முதல் பிரச்சாரத்திலேயே கமல் கடும் அட்டாக்
இந்நிலையில் தான் கன்னிகாவின் இந்த செயலை சிலர் கண்டிக்கின்றனர். அதாவது கணவர் சினேகன் சீரியஸாக தேர்தல் பரப்புரை செய்யும்போது பிரசார வாகனத்திலேயே நின்று கொண்டு தொண்டர்களுடன் சேர்ந்து ‛செல்பி’ எடுத்ததை கன்னிகா தவிர்த்து இருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications