பேராசான் பெரியார் மண்ணில் இருந்து.. இன்று பிரசாரத்தை தொடங்கும் முன்னரே சரவெடி கொளுத்திய கமல்ஹாசன்!
ஈரோடு: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு தொகுதியில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம் பெற்றுள்ளது. ஆனால் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் ராஜ்யசபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சிக்கு 1 இடம் வழங்குவதற்கு திமுக- மநீம இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடர்பாக கமல்ஹாசன் கூறுகையில், இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்திருக்கிறேன். மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதன்படி இன்று முதல் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.
ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக மநீம வெளியிட்ட அறிவிப்பில், திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் கமல்ஹாசன் ஈரோடு மற்றும் குமாரபாளையத்திற்கு (வெப்படை) (வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! என பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் பிரசாரம் செய்யும் தொகுதிகளில் போட்டியிடும் திமுக, திமுக கூட்டணி கட்சிகள்: மார்ச் 29 - ஈரோடு - திமுக, மார்ச் 30 - சேலம் - திமுக, ஏப்ரல் 2 - திருச்சி - மதிமுக, ஏப்ரல் 3 - சிதம்பரம் - விசிக, ஏப்ரல் 6 - ஸ்ரீபெரும்புதூர், சென்னை - திமுக, ஏப்ரல் 7 - சென்னை - திமுக, ஏப்ரல் 10 - மதுரை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஏப்ரல் 11 - தூத்துக்குடி - திமுக, ஏப்ரல் 14- திருப்பூர் - இந்திய கம்யூனிஸ்ட், ஏப்ரல் 15 - கோவை - திமுக, ஏப்ரல் 16 - பொள்ளாச்சி - திமுக.
காங்கிரஸ் மீது அதிருப்தி?: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் சில தொகுதிகள் மநீமவுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இதனை காங்கிரஸ் ஏற்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி மீது கமல்ஹாசன் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர இதர இடங்களில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications